இதில் மாவட்ட அளவில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, மதுக்கூர் அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அதிரை EP மாடல் பள்ளி, முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜகிரி, கட்டிமேடு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகள் கலந்து கொண்டார்கள்.
போட்டிகள் அனைத்தும் பள்ளியின் வளாகத்தில் நான்கு இடங்களில் தனித்தனியாக நடைபெற்றது. இறைவனின் இறுதிதூதர் நமது நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரில் முதன்மையான அரங்கம் இருந்தது.
இஸ்லாமிய வரலாற்றில்அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி புரிந்த கலிபாக்கள்.அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி)அலி (ரலி) ஆகியோரின் பெயர்களில் தனித்தனி அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அரபிக்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியின் நடுவர்களாக டெல்டா மாவட்ட அளவிலான அரபிப்போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற பல மார்க்க அறிஞர்கள், ஆலிமா பெருமக்கள்அழைக்கப்பட்டார்கள். இதில்அப்துல் காதர் உமரி (அல் குர் ஆன் மொழிப்பெயர்ப்பாளர்) மதுரை, மெளலவி சித்தீக் மிஸ்பாஹி (இமாம் மஸ்ஜித் இஃக்லாஸ் ராஜகிரி), மெளலவி முகைதீன் (லெப்பைக்குடிக்காடு),மெளலவி முகம்மது (காரைக்கால்), ஆலிமா நிலோபர் நிஷா ( ஜாமியா புஷ்ரா அரபிக்கல்லூரி), ஆலிமா சுமையா (நிஸ்வான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ராஜகிரி), ஆலிமா பாத்திமா (மதுரை), ஆலிமா பர்வீன் ஆகியோர் இருந்தனர். ஒவ்வொரு அரங்கத்திற்கு இரண்டு நடுவர்கள் என பணியாற்றினார்கள்.
இதுபோன்று பல சிறப்புகளுடன் காலை 10:00 மணியளவில் அர் ரஹ்மான பள்ளியின் UKG மாணவிகளில் இனிய குரல்களில் இறைவசனங்கள் ஓதி நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்கள்.
காலை முதல் மாலை 6 மணிவரை சிறு சலசலப்பும் இன்றி மிகவும் சிறப்பாக அரபிக்போட்டிகள் நடைபெற்றது. காலை, மாலை இரு வேலைகளும் அர் ரஹ்மான் கல்வி அறக்கட்டளை சார்பாக தேநீர் பரிமாறப்பட்டது.மதியம் வந்திருந்த அனைவருக்கும் (வெளியூர்) உணவு வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள், பெற்றோர்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.முகம்மது நபி (ஸல்) அவர்களின் அரங்கில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் மாணவ,மாணவிகள் பார்வையாளர்களை தங்கள் வசம் தக்க வைத்து இருந்தார்கள்.
உமர் (ரலி) அரங்கலில் அல்லாஹ்வின் திருநாமங்களை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்குதடையின்றி எடுத்துரைத்தார்கள்,
உஸ்மான் (ரலி) அரங்கத்தில் ஹதீஸ்கள் மனனம் போட்டிகளில் பங்குபெற்ற அத்தனை மாணவ,மாணவிகளும் தங்களின் திறமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள்.
டெல்டா மாவட்ட அரபிக்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் அர் ரஹ்மான் பள்ளியின் முதல்வர் சகோதரர் ஜெகபர் சாதிக், தாளாளர் கபார். கல்விக்குழு நிர்வாகிகள் அப்துல் காசிம், பீர் முகம்மது, சர்புதீன் மற்றும் பள்ளியின் ஆசிரியப்பெருமக்கள்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இப்போட்டிகளில் மாற்றுமத மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றார்கள்.
பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.