.

Pages

Monday, March 31, 2014

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் திமுகவினர் மரியாதை நிமித்த சந்திப்பு !

எஸ்.டி.பி.ஐ  கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் 26.03.2014 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுவில் முடிவு செய்தனர்.

இதையடுத்து அதிரை நகர திமுக நிர்வாகிகள், அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவதற்காக இன்று இரவு 8 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

இச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தஞ்சை தெற்கு  மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.





2 comments:

  1. அதிரை முக்கிய பொருபில்வுள்ள சேர்மன் அஸ்லம் அவர்கள் ஏன் இல்லை?

    ReplyDelete
  2. யாரை பிரதமாராக இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்ல வில்லை , இரண்டு திராவிட கட்சிகள் BJP யேய் தேர்தலில் விமர்சனம் பண்ணுவதும் இல்லை- தேர்தல் பிறகு கூட்டணி வைக்க காத்திருக்கிறனர்- திருட்டு களவாணிகள். நாமெல்லாம் இவங்களுக்கு கால்பந்து போல தேர்தலில் பயன்படுத்துகிறார்கள்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.