.

Pages

Wednesday, March 12, 2014

தஞ்சை தொகுதியின் அதிமுக வேட்பாளர் பரசுராமன் TNTJ அதிரை கிளையினருடன் சந்திப்பு !

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக அணிக்கு தமிழக தவ்ஹீத் ஜமாத் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை தந்த தஞ்சை தொகுதியின் அதிமுக வேட்பாளர் திரு கு. பரசுராமன் அவர்கள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் ஆதரவை கோரினார்.

சந்திப்பின் போது வேட்பாளரிடம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளாகிய அகல ரயில் பாதை திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அரசு மருத்துவமனை 24 மணி நேர சேவை, தீயனைப்பு நிலையம், அரசு ஆம்புலன்ஸ், காலேஜ் முக்கத்தில் வேகத்தடை அமைத்து தருதல், கஸ்டம்ஸ் சாலை சீரமைப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்றிதர வேண்டுகோள் வைத்தார். கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் செல்வி. செயலலிதா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

சந்திப்பு நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற தலைப்பிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





4 comments:

  1. Modekku vaakku keatkkum t.n.d.j
    markkam allam santhanakkuudu

    ReplyDelete
  2. Pallieei vaithu arseial pesalama?

    ReplyDelete
  3. ADMK அரசியல்வாதிகள் நோ அரசியல்வியாதிகள் இஸ்லாமிய மக்களை சந்திப்பதற்காக ஜனாப் முண்டாசு காதரை பயன்படுத்துவர் மற்ற நிகழ்சிகளில் அவர் புறக்கனிக்கப்படுவார், இவர்கள் நம் கோரிக்கை பர்சிலிக்கப்படுகிறதோ இல்லையோ நாம் வேட்பாளரை பர்சிலிக்க வேண்டும். தேர்தல் பிறகு இவர்களை பார்ப்பது ரொம்ப கடினம்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    இந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.