.

Pages

Sunday, March 16, 2014

சவூதி ஜித்தாவில் நடைபெற்ற அய்டாவின் மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு ! [ புகைப்படங்கள் ]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜித்தா அய்டாவின் மாதாந்திரக் கூட்டம் வழக்கம்போல் கடந்த 14.03.2014 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு  அதிரை சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் சிறப்பு அம்சமாக தாயகத்திலிருந்து சவூதி வருகை தந்திருக்கும் சமூக ஆர்வலரும், நாடெங்கும் பைத்துல்மால்களை நிறுவி வருபவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சகோ.எஸ்.எம். ஹிதாய்த்துல்லாஹ் அவர்களுக்கு அய்டாவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பைத்துல்மாலின் அவசியம் குறித்தும் அதன் வளர்ச்சியில் பொதுமக்களிம் பங்கு குறித்து ஹாஜி. எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் மிகச் சிறந்த விழிப்புணர்வு சிரப்புரை ஆற்றினார்.

 மேலும்  காயல்பட்டினம், கீழக்கரை இன்னும் பல ஊர்களின் சங்க நிர்வாகிகளுக்கும், தமுமுக, ததஜ, எஸ்டிபிஐ, தஃபாரெஜ், டிஎம் எஃப் உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளுக்கும்  அய்டாவின் சார்பில் அழைப்பு விடுத்து பைத்துல்மால் நிறுவப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இறுதியில் இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

தகவல் : ஜஃபருல்லா - ஜித்தா
புகைப்படம் : அப்துல் அஜீஸ்RABEA TEA ]


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.