இதில் நகர செயலாளர் நா. காளிதாஸ் தலைமை வகிக்க, S. பன்னீர் செல்வம், A. அஹமது மக்தூம், MLA ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை CPI கட்சியின் மாவட்ட செயலாளர் T. திருஞானம் துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்தினார். கண்டன உரையை மாவட்ட துணை செயலாளர் முத்து. உத்திராபதி நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட த.மு.மு.க / ம.ம.க வின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி மற்றும் த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கும், அனைத்து வார்டுகளுக்கும் வடிகால் வசதி செய்து தருதல், 7 வது வார்டை புறக்கணிப்பதை கைவிடுதல்,சேது ரோடு, மெயின் ரோடு, MMS பில்டிங் அருகில் சந்திப்பில் தேங்கியுள்ள நீரை நிரந்தரமாக அகற்றுதல், உயிர் சேதம் தவிர்க்க ரவுண்டான கட்டி தருதல், மனித கழிவுகளை பேரூராட்சி அருகில் விடாமல் தடுக்க, அரசின் பொதுநிதியை பெற்று அடிப்படை வசதிகள் செய்து தருதல், அதிரையில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை தார் சாலைகளாக மாற்றிதருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினார்கள்.
ஆர்பாட்டத்தின் இறுதியில் AIYF நகர தலைவர் ஹாஜா முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் கம்யூனிஸ்ட் கட்சியினர், த.மு.மு.க / ம.ம.க வினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில் யாரும் கலந்து கொண்டார்களா?
ReplyDeleteஹிஹிஹி
கம்யுனிஸ்ட் கட்சிகள் அ தி மு க உடன் கூட்டு ........ ம ம க கட்சி தி மு க உடன் கூட்டு ஆனால் அதிரையில் மட்டும் கம்யுனிஸ்ட்டும் ம ம க வும் சேர்ந்து கூட்டு போராட்டம் ?????????? எங்கேயோ இடிக்கிதே ?????? ஒரே உரையில் இரண்டு கத்திகள் கூடாது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுகாதரா சீர்கேட்டை கலைவதற்கு மா மா க உட்பட கவுன்சிலர்கள் எடுத்து முயற்சிகள் என்ன?
ReplyDeleteஅனைத்து வார்டுகளின் உறுப்பினர்களின் இப்போதைய ஓரே வேலை புதிய வீடுகளுக்கு புலூ பிரின்ட் எடுத்துக்கொடுப்பது குடிநீர் இனைப்பு எடுத்துக்கொடுப்பது போன்ற தனக்கு வருமானம் வரக்கூடிய வேலைகள்தான் செய்கிறார்கள்
Mohamed ashraf sariyaga sonnirgal, arasiyal oru sakkadai..ithil nammavargal, pilaipathu thavarillai..anaal thanipatta pirachanaigalai arasiyal akkuvathu thavaru..
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
இந்த கூட்டத்தில் உண்டியல் குளுக்கினார்களா இல்லையா ? அடுத்த போராட்டம் நடத்த வேண்டுமே!
ReplyDeleteஅவர்கள் உண்டியல் குலுக்கினார்கள் இல்லை ரோட்டில் இருந்து காசு கேட்டார்கள் என்ற கேள்வி எல்லாம் தேவை இல்லாத ஒன்று.
Deleteஎப்பொழுதும் கம்யூனிஸ்டுகளுக்கு மற்ற கட்சிகள்,அமைப்புகள் போல் எல்லாம் வெளிநாடு நிதி என்பது அவர்களுக்கு ஆபுர்வமே.
மக்களின் பிரச்சினைகளுக்கும் மற்றும் கோரிக்கை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் ஆர்பாட்டம் நடந்தால் வரவேற்கபடவேண்டிய ஒன்று.
சுயநலம்,கட்சியின் பெயருக்காக தான் இப்பொழுது போராட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
ReplyDelete//அனைத்து வார்டுகளின் உறுப்பினர்களின் இப்போதைய ஓரே வேலை புதிய வீடுகளுக்கு புலூ பிரின்ட் எடுத்துக்கொடுப்பது குடிநீர் இனைப்பு எடுத்துக்கொடுப்பது போன்ற தனக்கு வருமானம் வரக்கூடிய வேலைகள்தான் செய்கிறார்கள்//
நான் மேற்குறிப்பிட்டு எடுத்துக்காட்டிய சகோதரர் அஷ்ரப் அவர்களின் கருத்து நூறு விழுக்காடு உண்மையானத ஏனெனில் மொத்தம் நமதூரிளில்லுள்ள 21 வார்டுகளில் 5 முதல் 10 வரையிலான கவுன்சிலேர் கலைத்தவிர மற்றவர்கள் மக்கள் மனதில் இடம்பெற முயல்கிறார்களோ இல்லையோ ஆனால் அரசாங்கம் சம்பந்த்தப்பட்ட துறை வேலைகளான எந்த சான்றிதல் பெறுவதாக இருந்தாளுன்சரி ஆண்துணை அல்லது வெளிநாடுகளில் வாழும் கணவர்களின் மனைவிமார்கள்(நமதுசகோதரிகள்) செய்வதறியாது அந்தந்த வார்டு கோன்சிலரை இதற்குண்டான வேலைகளை முடிதுத்தரும்படி நாடும் பட்சத்தில் முற்றிலும் இறைபற்றில்லாமலும், சமூகசிந்தனை இல்லாமலும் அவர்கள்(கவுன்சிலேர்கள்) மறைமுகமாக கையூட்டும் கேட்கும் விதமாக ராத்தா இந்த வேலையை முடிக்க மிஞ்சி மிஞ்சி போனால் (50-100 ரூபாய்க்கு பதிலாக) ரூபாய் 500 தேவைப்படுமென்று மக்களை ஏமாற்றி பணம் பரிக்கிரார்களே இவர்களுகேதிராக கொடிபிடித்து போராட்டம் ஆர்ப்பாட்டம் வேண்டாமா?
அன்பிற்கினிய அன்பர்களே எம்மை படைத்த ரப்புலாலமீனுக்காக பயந்துகொல்வோம் நாம் அனைவரும் நன்மையின்பால் நம்மளை ஈருபடுத்திகொள்ளும் விதமாக ஒவ்வரு வீட்டிலுள்ள இலைகர்களும் அவரவர் குடும்பத்திற்கும் தெருக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அல்லாஹ்வின் அன்பையும் சதகாவின் நன்மையையும் பெற்றுசெல்வோம் ஆமீன்
//அனைத்து வார்டுகளின் உறுப்பினர்களின் இப்போதைய ஓரே வேலை புதிய வீடுகளுக்கு புலூ பிரின்ட் எடுத்துக்கொடுப்பது குடிநீர் இனைப்பு எடுத்துக்கொடுப்பது போன்ற தனக்கு வருமானம் வரக்கூடிய வேலைகள்தான் செய்கிறார்கள்//தாங்களுக்கு இது தெரிந்தும் இப்பொழுது உரைத்து இருக்கிறீர்கள் அப்படி இருக்க தாங்கள் இதை ஒரு குறிக்கோளாக எடுத்து எந்த ஒரு சுயநலம் இல்லாமல் செய்யலாம் நம்முடைய தஸ்தாவேஜுகள் சரியாக இருந்தால் யாரையும் எதிர்பார்க்காமல் முறையாக கையாள நமக்கு எந்த தடையும் கிடையாது மடியில் கணம் இருந்தால்தான் செல்லும் வழியில் கணம்
ReplyDelete