.

Pages

Thursday, March 20, 2014

டி.ஆர் பாலுவை ஆதரித்து அதிரையில் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்ற தேர்தல் பிராச்சார கூட்டத்தில் திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து திமுக கட்சியின் மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றனர்.

ஸ்டாலின் தனது பிரச்சார உரையில் திமுகவின் சார்பில் கடந்த ஆட்சியில் அதிரையில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களாகிய தரகர்தெரு, கடற்கரைதெரு நீர்தேக்க தொட்டி, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை புதிய கட்டிடம், காவலர் குடியிருப்பு புதிய கட்டிடம், வெள்ள நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசினார்.

முன்னதாக பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார மேடையில் கூட்டணி கட்சியின் நகர நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்கள். நகர செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகிக்க, கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மதுக்கூர் ராவுதர்ஷா, முஸ்லீம் லீக் நகர தலைவர்  K. K. ஹாஜா ஆகியோர் உரை நிகழ்த்தியதில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்கள்.

முன்னதாக மனித நேய மக்கள் கட்சியினர் அதிரைக்கு வருகை தந்த மு.க ஸ்டாலினை, நகர திமுகவினருடன் வண்டிப்பேட்டையிலிருந்து பிரச்சாரம் நடைபெரும் இடமாகிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வரவேற்று அழைத்து வந்தனர்.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் சார்பில் சாலையின் இருபுறமும் மின் விளக்குகளால் ஜோடிக்கப்பட்டு கூட்டணி கட்சியின் கொடிகளும், வரவேற்பு ஃப்ளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

இதில் திமுக கட்சியினர், இதர கூட்டணி கட்சியினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்கள். போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்கள்.





5 comments:

  1. டிஆர் பாலு வெற்றி பெற வாழ்த்துக்கள்...................

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    யாருமே சரியில்லையே, தேர்தல் எதுக்கு? வாக்கு எதுக்கு? டென்ஷன் எதுக்கு? அடிதடி எதுக்கு? தள்ளு முள்ளு எதுக்கு? தில்லு முள்ளு எதுக்கு? ஏதாவது ஒழுங்காக இருக்கா? இதுந்தாதானே ஒழுங்காக இருக்க.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. "a sorry state of affairs" - தமுமுகவினர், மமகவினர் தமது கட்சி தலைவர்கள் ஊர் விழாவிற்கு வரும்போது இதுபோல் 100 பேர் நின்று வரவேற்பு கொடுத்திருக்கின்றனரா? வேறு கட்சித் தலைவருக்கு கால்கடுக்க நின்று கூட்டம் சேர்ப்பது, கூலிக்கு மாரடிப்பது போன்றுள்ளது.

    My sympathies to MMK brothers....

    ReplyDelete
  4. தரகர் தெரு தண்ணீர் தொட்டி பற்றி பேசி இருக்கிறார்கள் - இது DMK காரர்கள் செய்த முயற்சி கிடையாது - ஜனாப் அகமது ஹாஜா தலைமையில் மேற்கொண்ட முயற்சி எனலாம், அவர் DMK அல்ல, எப்படி தம்பட்டம் அடிக்கிறார்கள்.

    ReplyDelete
  5. Typical adirai words ஜோடிக்கப்பட்டு good kept up

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.