.

Pages

Friday, March 21, 2014

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு சமூக ஆர்வலர்கள் வைக்கும் கோரிக்கை !

அதிரை செக்கடிமேட்டின் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளது. இங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியினர் மருத்துவமனைகளுக்கு செல்லவும், குடும்ப விழாக்களுக்கு செல்வது, வெளியூர் செல்ல இப்படி அனைத்து தேவைகளுக்கும் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து அதிரை வரும் பயணிகள் அவரவர் வீட்டிருக்கு செல்வதற்கு ஆட்டோக்களை பயன்படுத்தி வருவது வாடிக்கையான ஒன்றாகும். வழக்கம் போல் நேற்று செக்கடி மேட்டின் அருகே அதிகாலையில் சென்னையிலிருந்து ஆமினி பஸ்ஸில் வரும் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக வந்த ஆட்டோ ஓட்டுனர்களிடேயே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கலவரம் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமானது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் அவர்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம் வருத்தத்துடன் கூறுகையில்...
'அதிரையின் பிரதான பகுதிகளில் ஒன்று செக்கடி மேடு. இங்கே தினமும் 15 க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி வருகின்றன / அதே போல் புறப்பட்டும் செல்கின்றன. பஸ்கள் வந்து செல்ல கூடிய நேரங்களில் இந்த பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். நேற்று காலை ஆட்டோ ஒட்டுனர்களிடேயே ஏற்பட்ட தகராறின் போது ஒருவருக்கு ஒருவர் தகாத வார்த்தைகளில் பிறர் முகம் சுள்ளிக்கும் அருவருப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதும், இதில் ஒரு சாராருக்கு ஆதரவாக வெளியாட்களை கூட்டிவருவது பெரும் கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் நமக்கு ஏற்படுகின்றன.

சம்சுல் இஸ்லாம் சங்க எல்லைக்குட்பட்டு வரும் இந்த ஆட்டோ ஸ்டாண்டை சங்க பொறுப்பில் எடுத்துக்கொண்டு ஆட்டோ ஒட்டுனர்களிடேயே ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பது பாதுகாப்பானதாக அமையும். மேலும் ஆட்டோ ஓட்டுனர்களின் முகவரிகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை அவர்களிடமிருந்து கேட்டு பெறுவதும் அவசியம். அவர்களிடேயே ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக கட்டுப்பாடுடன் கூடிய ஒரு ஒழுங்குமுறையை பின்பற்றவும் வலியுறுத்தலாம்' என்கின்றனர்.


2 comments:

  1. "அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு சமூக ஆர்வலர்கள் தேவை"ன்னு படிச்சுட்டேன்...

    ReplyDelete
  2. மேற்சொன்ன ஒழுங்கு முறை படுத்த வேண்டும், ஆட்டோவில் பள்ளிகளுக்கு அதிகமாக மாணவர்களை அழைத்து செல்வது தவிர்க்க பட வேண்டும். ஆடோக்களுக்கு சங்கம் இருந்தால் அங்கே முறை இடுவது நல்லது. ஆம்னி பேருந்துகள் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கினால் என்ன?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.