முத்துப்பேட்டை பகுதிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, கணவ னால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொ கையை மாதந்தோறும் வழங்காமல் 3 மாதம், 4 மாதம் என அதிகாரிகள் தாமதம் செய்வதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர செயலாளர் காளிமுத்து தலைமையில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மறியலில் 250 பேர் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார், 250 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். அங்கு திருத்துறைப்பூண்டி தனி தாசில்தார் கலைஷ்வரன், விஏஒ கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி தெரிவித்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
செய்தி : தினகரன்
இவர்கள் தினமும் போராட்டம் நடத்துவார்கள் ஆனால் எதுவும் நடக்காது, இப்படி ஒரு கட்சி இருப்பதை நினைவு படுத்துகிறார்கள் போலும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.