UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A. ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு UAPA சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் போது UAPA சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தி தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் PFI, SDPI, கேம்பஸ் ஃபிராண்ட் ஆப் இந்தியா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, விவசாய விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கலந்துகொண்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்....
ReplyDelete