.

Pages

Tuesday, March 11, 2014

அதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினரை சந்தித்த திமுகவினர் !

தமிழக அரசியலில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைக்கப்பட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தி.மு.கவோடு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டு, முஸ்லீம் லீக் சார்பில் வேட்பாளராக அப்துல் ரஹ்மான் அவர்கள் போட்டியிடுவார் என அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு போட்டியிட இருப்பதற்கான அறிவிப்பு வந்ததை அடுத்து அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு திமுகவின் கூட்டணி கட்சியான த.மு.மு.க / ம.ம.க வின் அலுவலகத்திற்கு சென்று அதன் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 7 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிரை அலுவலகத்தில் அதன் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



2 comments:

  1. கால காலமா இதயத்தில் இடம் கொடுத்த கட்டுமரக் காரர் (கருணாநிதி ) ஒரு இடம் IUML க்கு கொடுத்தாலும் அவர் அடித்த 2 G மெகா ஊழலால் வெற்றி நிச்சயம் சந்தேகமே. இருந்தாலும் உசார் உசார். 50 ஆண்டு ஆகியும் இன்னமும் IUML ஒற்றை இலக்கத்தில் தான் போட்டி இடுகின்றனர்- நம் சமுதாய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை என கூறலாமா?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    இந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.