.

Pages

Saturday, March 22, 2014

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் திரளானோர் பங்கேற்பு !

அதிரை லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் சாரா திருமண மண்டபத்தில் இன்று [ 22-03-2014] காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்று வருகிறது.

இதில் அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர். நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது மற்றும் லயன்ஸ் சங்க ஏனைய நிர்வாகிகள் மேஜர் முனைவர் கணபதி, அப்துல் ஹமீது, ஜலிலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன், ஆறுமுகசாமி ஆகியோர் செய்து இருந்தனர். 

இன்றைய முகாமில் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் லியோ நிர்வாகிகள் நியாஸ் அஹமது, அதிரை மைதீன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து வருகின்றனர்.

இன்றைய முகாமில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.


1 comment:

  1. முகாம் நடந்த பிறகு இலவச கண் அறுவை சிகிச்சை பெற்பவர்களின் அனுபவங்களை பேட்டி எடுத்து போட்டால் நல்லது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.