இவ்வாறு பெறப்படும் தொகை நிர்ணயித்த தொகையை வீட கூடுதலாக வசூலிப்பதாக கூறி நமதூர் A.J நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது சுல்தான் அவர்கள், பொதுமக்களின் கையொப்பமுடன் வங்கியின் தலைமையகத்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகாராக அனுப்பிருந்தார். இது குறித்த செய்தியை கடந்த [11-02-2014 ] அன்று 'அதிரை வங்கியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் !' என்ற தலைப்பில் அதிரை நியூஸில் செய்தியாக வெளியிட்டுயிருந்தோம்.
இவற்றை பார்வையிட்ட அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் சேனா மூனா ஹாஜா முகைதீன், அதிரை மைதீன் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் வங்கியின் தலைமையகம் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் கவனத்துக்கு எடுத்து சென்றனர். இதற்காக அதிரை நியூஸ் செய்தியை சுட்டிக்காட்டி துரித நடவடிக்கையை உடனடியாக எடுக்கவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரிவின் அலுவலர்கள் வங்கிக்கு நேரடியாக வருகைதந்து பேச்சுவார்த்தைக்கு புகார்தாரரை அழைத்திருந்தனர். வங்கிக்கு கடந்த [ 19-02-2014 ] அன்று மாலை சமூக ஆர்வலர்கள் முஹம்மது சுல்தான், சேனா மூனா ஹாஜா முகைதீன், அதிரை மைதீன் ஆகியரோடு அதிரை நியூஸின் பிராதான செய்தியாளரும் உடன் சென்றிருந்தார்.
சுமூகமாக நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் வங்கியின் தரப்பில் இருந்து கடந்த காலங்களில் அவர்களின் பார்வையில் படாமல் நிகழ்ந்த தவறுக்கு நம்மிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதோடு, வங்கி நிர்ணயித்துள்ள நகை மதிப்பீட்டாளர் கட்டணம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிவிப்பு அட்டையை வங்கியில் தொங்கவிடப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு நேற்று சனிக்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் வங்கி சேவையில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அல்லது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வீட கூடுதலாக பொதுமக்களிடம் வசூலிக்க நேரிட்டால், இது குறித்து வங்கியின் மேலாளலரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.
குறிப்பு : இஸ்லாமிய மார்க்கத்தில் வட்டி வாங்குவதும் / கொடுப்பதும் விரோத செயல் எனக்கூறி அவற்றிலிருந்து விலகி இருக்க கூறுகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.