.

Pages

Monday, March 10, 2014

தெரு நாய்கள் சுற்றிவளைப்பு ! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிரை பேரூராட்சி !!

நாய்களை பிடித்து கொல்வது என்பது இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி காணப்பட்டு வந்தது. தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றிவந்தன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இதுகுறித்து அதிரை நியூஸில் அவ்வபோது தலையங்கமும்
தீட்டப்பட்டு வந்தன.

அதிரை நகர மக்களுக்கு தெருநாய்களால் ஏற்பட்டுவரும் அச்சுறுத்தலை கவனத்தில் எடுத்துக்கொண்ட பேரூராட்சி நிர்வாகம் அதிரையில் தெருவோரம் சுற்றித்திறியும் தெரு நாய்களை பிடிப்பதற்காக ஊழியர்களை பணிகளில் இன்று ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அதிரையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு சென்று நாய்களை பிடித்து கூண்டில் ஏற்றி வருகின்றனர்.

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. >>அதிரை நகர மக்களின் மேல் அக்கறை கொண்ட பேரூராட்சி நிர்வாகம் <<

    Is this a paid news?

    "ஒரு சொலவடை ஒன்னு சொல்லுவாங்க. நாய் விற்ற காசு குரைக்காது"

    ReplyDelete
  3. நாய்களை ஒழித்து விட்டால் இனி திருடனுக்கும் , சமூக விரோதிகளுக்கும் கொண்டாடம் தான். நாய்கள் நன்றி உள்ளவைதான் இதற்கென்று அமைப்பு ஊரில் இல்லை , முறையாக பராமரித்தால் விபரிதங்களை தவிர்க்கலாம் , பணம் கொடுத்து வாங்கும் நாய்கள் செல்ல பிராணிகள், ஆனால் தெரு நாய்கள் கேவலமோ?

    ReplyDelete
  4. சகோ. மாஹிர்

    கருத்துரைக்கு நன்றி !

    // Is this a paid news? //

    குட்ட வேண்டிய இடத்தில குட்டவும், பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டவும் அதிரை நியூஸ் தயங்காது.

    இதற்கு முன்பு தெருநாய்களின் கொட்டங்களை அடக்க நடவடிக்கை எடுக்க அதிரை நியூஸ் வலியுறுத்தியுள்ளது என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

    நேரமிருந்தால் கீழ்கண்ட சுட்டிக்கு சென்று பார்வையிடுங்கள்

    http://theadirainews.blogspot.in/2013/09/blog-post_6002.html

    http://theadirainews.blogspot.in/2013/12/blog-post_2513.html

    ReplyDelete
  5. //அதிரை நகர மக்களின் மேல் அக்கறை கொண்ட பேரூராட்சி நிர்வாகம் //

    அந்த சின்ன சிங்கப்பூர் என்னாச்சு ?

    ReplyDelete
  6. செய்தி வெளியிடுவதே ஒருவகை பாராட்டுதான். மற்றபடி உங்களுடைய பசை வார்த்தை கொஞ்சம் அதிக பிரசங்கி.

    ஊடகம் மக்கள் சார்பானதாக இருக்கவேண்டும். அரசு, காவல்துறை, அரசியல்வாதிகளுக்காக செயல்படக் கூடாது.

    நீங்கள் இன்னும் பக்குவமாகவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
  7. சகோ. மாஹிர்

    கருத்துரைக்கு நன்றி !

    // உங்களுடைய பசை வார்த்தை கொஞ்சம் அதிக பிரசங்கி. //

    வார்த்தையில் தடவிய பசை நீக்கப்பட்டு விட்டன :)

    ReplyDelete
  8. திருத்தியமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. ஒரு உயிரை கொல்வது பாவம்.இனப் பெருக்க தடை ஊசி போடலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.