சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு நன்றி!
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
அதிராம்பட்டிணம் சேர்மனாக உள்ள சகோதரர் அஸ்லம் அவர்களின் பிரச்சனை ஒன்றில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலையிட்டு தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தன் பிரச்சனைக்காக நம் ஜமாஅத் சகோதரர்களுடன் கலந்து பழக ஆரம்பித்த சேர்மன் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக தவ்ஹீத் கொள்கை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ். கந்தூரி, மவ்லித் போன்ற அனாச்சாரங்களுக்கு நன்கொடை கேட்டு என்னிடம் வராதீர்கள் என்று அவர் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யும் அளவு அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் குர்ஆன், ஹதீஸ் என்ன சொல்கிறது என்று கேள்வி கேட்டு தெரிந்து கொள்கிறார். அவரது பிரச்சனையில் ஜமாத் நன்மை செய்ததோ இல்லையோ சரியான கொள்கை எது என்பதை அவர் விளங்க அல்லாஹ் இப்படி ஒரு உறவை அவருக்கும் அதிரை கிளைக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அல்ஹம்து லில்லாஹ்.
இந்நிலையில் இன்று 19-02-2014 மாலை முதல் மார்க்கப் பிரச்சாரப் பணிக்காக அவரது சொந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள மூன்று வருடங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார்.
அஸ்லம் அவர்கள் அவரது இடத்தில் மூன்று வருடம் பிரச்சாரம் செய்ய நம்மை அனுமதிக்கிறாரோ இல்லையோ அவர் இப்படி ஒரு நிய்யத் வைத்திருந்தால் அவருக்கு அதற்கான கூலியை அல்லாஹ் அவர் நினைத்த மாத்திரத்திலேயே எழுதியிருப்பான்.
அல்லாஹ்வின் அருளால் எந்த விளம்பரமும் இல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று [ 19-02-2014 ] நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கேள்விப்பட்ட ஏராளமான சகோதரிகள் அடுத்த வாரம் கலந்து கொள்வதாக சொல்லியுள்ளனர்.
ஆனால்...
இது வரை சேர்மன் அவர்களுக்கு ஜால்ரா அடித்தவர்களும் மார்க்கத்துக்கு முரணான நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போது அவருக்கு அறிவுரை சொல்லாதவர்களும் இப்போது கொதித்தெழ ஆரம்பித்துள்ளனர். இவர் நிலையில்லாதவர், கொள்கையற்றவர், ஹைதர் அலி ஆலிமையே தூக்கியெறிந்தவர் இவரை நம்ப வேண்டாம் என்று நம் காதில் விழுமாறு சரமாறியாக தாக்க ஆரம்பித்துள்ளனர் .
சரியான கொள்கைக்கு இப்படித்தான் எதிர்ப்பு வரும் என்பதையும் இது வரை நடித்துக் கொண்டிருந்து விட்டு இப்போது திட்டித் தீர்க்கும் நயவஞ்சகக் கூட்டத்தையும் அஸ்லம் அவர்கள் விளங்கிக் கொண்டிருப்பார்கள்.
நம் ஜமாஅத்துடன் நல்லிணக்கம் பேணும் அவரைத் தூற்றுவோரிடம் நாமும் பதிலடிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அஸ்லம் அவர்கள் தவறு செய்தால் அதை அவர் முன்னாலேயே கண்டிப்போம், அவருக்கு ஜால்ரா அடிக்க மாட்டோம். ஒரு வேளை சகோதரர் அஸ்லம், இவர்கள் நினைப்பது போல் மாறி விட்டாலும் அதனால் ஜமாத்துக்கு எந்த இழப்பும் இல்லை, அவர் நன்மைக்குத் தான் அவர் இதைச் செய்கிறார், ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்பதையும் அவரின் எதிரிகளிடம் நாம் பதிலாகச் சொன்னோம்
நான் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் இவ்வளவு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு அனுமதியளித்துள்ள சகோதரர் அஸ்லம் அவர்களின் பிரச்சனை நல்லபடியாக முடிய வேண்டும் என்றும் அல்லாஹ் அவரை முழு ஏகத்துவவாதியாக மாற்ற வேண்டும் என்றும் அரசியல் கட்சியிலிருந்து அவர் விலகி மார்க்கம் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து பணியாற்றும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் நீங்கள் அவருக்காக துஆச் செய்யுங்கள். அப்போது தான் அவர் செய்யும் இந்த நன்மைகளுக்கு முழுமையான கூலி மறுமையில் கிடைக்கும்.
சொல்ல முடியாது , ஒருவரை தற்காலிக நிலையை வைத்து நாம் முடிவு செய்ய இயலாது, இறுதி நிலையை வைத்தே முடிவு செய்ய முடியும்.
ஏன் நம் ஜமாஅத்தில் இப்போது இருக்கும் பல சகோதரர்கள் ஒரு நேரத்தில் குடிகாரர்களாக, கொலைகாரர்களாக தொழாதவர்களாக, தாடி இல்லாதவராக, தர்ஹாவாதியாக இருந்தவர்கள் தான். இன்று அவர்கள் மூலம் அல்லாஹ் இந்த தவ்ஹீதை வளர்க்கவில்லையா?
அது போல் அல்லாஹ்வின் மார்க்கம் வளர அஸ்லம் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து விட்டால் எந்தக் கொம்பனாலும் உள்ளத்தில் வேரூன்றிய தவ்ஹீத் கொள்கையை அழிக்க முடியாது
சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு கிளை தாயீ என்ற முறையில் எனது சார்பாகவும் ஜமாஅத் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹு ஹைரா.
இறுதியாக ஒரு ஹதீஸ் ( முஸ்லிம் 5145 )
உண்மையே பேசியவரும் உண் மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப் பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற் றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட் கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங் களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல் வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளை வாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
A. அஸ்ரப்தீன் பிர்தெளஸி
Ada ene thakvapalle nekalchchukku vara matdarnu sollugka,
ReplyDeleteஉண்மை நிகழ்வு அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிவான் இன் நிகழ்வு உண்மை எனில் என் ஆதரவும் வாழ்த்துக்களும்........
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியல் அழியக்கூடியதே .
ReplyDeleteAppo adirainews searmean pakkamnu sollugka
ReplyDeleteஎல்லாப் புகழும் இறைவனுக்கு. அஸ்லாமைப் புகழ்வது விதிவிலக்கு.
ReplyDeleteஅரசியல் சாக்கடை என்று சொன்னார் அண்ணா. அதனால் சாக்கடையில் வீழ்ந்தால் சாக்கடை மணக்கத்தான் செய்யும்.
இந்த அறிவிப்பு நன்றி சொல்வது போல் இல்லை - மற்ற அமைப்புக்கு சவால் விடுவது போல் உள்ளது, நமக்குள் பிரிவினை உண்டாக்க ஊரில் எத்தனை அமைப்பு? ஏன் , ஒரு வீடுக்குள் இரு அமைப்பு சேர்ந்தவர்கள் உள்ளனர் , அட டா என்ன ஒற்றுமை பாருங்கள் ! சிந்தித்தால் ஒற்றுமை காணலாம்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete