.

Pages

Sunday, March 16, 2014

தண்ணீர் எவ்வளவு ஆழத்திலே கிடக்குதுங்க !?

முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் அதிரைக்கு குடிநீரை, உயிர்நீராக தந்து கொண்டிருந்தது மண்ணப்பன் குளமும், சி.எம்.பி லைன் மற்றும் காட்டுக்குளப்பகுதிகளில் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களுக்கு இடையில் உருவாகி இருந்த மண் கிணறுகளும்தான், இதை யாராலும் மறக்க முடியாது. இதுதான் உண்மையும்கூட, மண் குடம்களிலும், பானைகளிலும், தண்ணீர் வண்டிகளிலும் தண்ணீரை சுமந்து சென்று விநியோகம் செய்தனர், அன்று தண்ணீருக்கும் நமக்கும் எவ்வளறு தூரம் தெரியுமா? வெறும் கைக்கு எட்டின தூரம் மட்டும்தான்.

1975 களில் நமதூரில் எல்லாக் குளங்களும் நீர் நிரம்பி காணப்பட்டன, பருவ மழையும் தவறாமல் பெய்துவந்தது, நிலத்த்தடி நீர் மட்டமும் கைக்கு எட்டின தூரத்தில் இருந்தது. அந்த நேரத்தில் தான், சி.எம்.பி.லைன் வடமேற்கு எல்லையில் அமைந்துருக்கும் காட்டுக் குளப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு நீர் எடுத்து அதிரையின் நாலாபுறமும் விநியோகம் செய்யப்பட்டது.

இன்று எப்படிங்க? மண்ணப்பன் குளங்களும் இல்லை, மண் குடம்களும் இல்லை, மண் கிணறுகளும் இல்லை, குளத்தில் தண்ணீரும் இல்லை, எல்லாக் குளங்களும் வற்றி விளையாட்டு மைதானமாக காட்சி அளிக்கின்றன. மறுப்பக்கம் குடிநீர் தட்டுப்பாடு வேறு, சி.எம்.பி.லைன், மற்றும் காட்டுக் குளப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 110 அடிக்கு கீழ் இறங்கி விட்டது. எல்லோர் வீடுகளிலும் புதுப்புது போர் தோண்டுதல், பழைய போரை சரி செய்தல், போதாக் குறைக்கு மேலும் குழாய்களை இறக்குதல் போன்ற வேலைகள் நடந்து வருகின்றது.

இதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு?

அதிரையில் வறண்டுபோன குளங்களில் காட்டுக்குளமும் ஒன்று, அதில் புதியதாக எட்டு இன்ச் அகலத்திற்கு இருநூற்றி ஐம்பது அடி ஆழத்திற்கு ஒரு ஆழ்துளை கிணறு நமது பெரூராட்சியால் தோண்டப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணறுக்கு மிக அருகாமையில் குடியிருக்கும் வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் உண்டு, தற்போதைய நீர் மட்டம் நூற்றி பத்து அடி ஆழத்தில் இருக்கின்றது.

இப்படிக்கு .
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.                           
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை,

16 comments:

  1. மனித உரிமை ஆர்வலர் ஜமால் காக்காவின் ஆதங்கம் நியாமானதுதான் ! பேசாம பிலால் நகருக்கு குடியிருப்பை மாத்திடுங்க 40 அடி ஆழத்திலே தண்ணீர் நிறைய இருக்கு :) மனை விலையும் சல்லீசு :)

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நல்லது என்று இருக்கேன். இன்ஷா அல்லாஹ் இது நடக்கும்.

      Delete
  2. சரியான நேரத்தில் ஒரு சரியான சரித்திரத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்... நமது ஊர் காலங்களமாக , ஆறு, குளம் தோப்பு என்று தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இப்போ மப்ரூக் நகர் (மிலாரிக்காடு ) ஏரியாவில் இருந்து தான் பல வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் இன்று ..அங்குள்ள எல்லாவீடுகளுக்கும் வீட்டு போஃர்களில் இருந்து தண்ணீர் வரத்து நின்று விட்டது. என் வீட்டில்லும் தான்.
    ஆதலால் நாங்கள் மீண்டும் இரு பைப்புகளை கீழ் இரக்கியுள்ளோம். பிறகுத்தான் எனக்கு தெரிய வந்தது எங்கள் வீட்டுக்கு மட்டும் இல்லை அங்கு உள்ள எல்லா வீடுகளுமே கம்பஃர்ஸ்சர் , மற்றும் பைப் இரக்கியுள்ளனர்.
    இப்படியே போனால் மிக அருகாமையில் நமது ஊருக்கு "நில அதிர்வு" தென்படலாம் அல்லாஹ் பாதுகாப்பானாக.
    இங்கு என் பதிவை வைக்கிறேன்.. நமது ஊருக்குல் இரு ஆபத்து உள்ளது அது தான்....வியாபாரத்திர்க்காக....வைத்த "சுவீட் வாட்டர்"...இவர்கள் ஒரு நாளைக்கு நம் நிலத்தில் இருந்து உருஞ்சும் தண்ணீரின் அளவு...ஒட்டு மொத்த அதிராம்பட்டினமும் 10 நாளைக்கு தேவைக்கு செலவு செய்யும் நீரின் அளவில் இரு பங்கு.
    ஆகயால் நல்ளுல்லம் கொண்ட நமதூர் சமூக அக்கரைக் கொண்டவர்கள் இதர்க்கான ஒரு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்...
    நமதூர் நலன் கருதியவனாக.
    அ.அஹமது மொய்தீன்
    துபை.

    ReplyDelete
    Replies
    1. தம்பி பொது சேவையா?
      நம்ம ஊரை நம்பியா?
      யாரு அடி வாங்குவது?

      நம்ம ஊரை நம்பி மீன் விற்கலாம்.
      தினமும் மட்டன் பிரியாணி விருந்து போடலாம், ரோட்டில் போகின்ற ஆண்களையும் பெண்களையும் கண்டபடி பேச தெருவுக்கு தெருவு, மூலைக்கு மூலை கடப்பா கல்லில் உட்கார இடம் இலவசமாக கட்டிக் கொடுக்கலாம்.

      Delete
    2. காக்கா ... நல்லாச் சொன்னிங்க காக்கா....
      மேலும் இன்ஷா அல்லாஹ் ..இனி வரும் நம் இளைங்ஞர்கள் முன் வருவார்கள்.... முயற்சிசெய்வோம் காக்கா துஃவாச்செய்யுங்கள் ..இனி வ்ரும் காலம் வெல்லும்....எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கு...

      Delete
  3. நீர் நிலை இவ்வளவு மோசமாக போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் - இந்த நிலைமை பெரும்பாலோர்க்கு தெரியாது இதன் அவசியத்தை வலிவுர்த்தி விழுப்புணர்வு ஏற்படுத்த தெருவில் உள்ள மன்றம், இயக்கம், சங்கம் நிர்வாகிகள் முயற்சி செய்ய வேண்டும்.
    அரசு அலுவலங்கள், மருத்துவ மனை சுவர்களில் விழுப்புணர்வு விளம்பரங்கள் இடம் பெற வேண்டும், சில இடங்களில் தண்ணீர் வீணாக போகிறது இதனை சரி செய்ய வேண்டும், மரம் வளர்ப்பு, தண்ணீர் சேமிப்பு அவசியத்தை வலிவுர்த்த நாம் தவறினால் நம்முடைய சந்ததினருக்கு காசு கொடுத்து சுத்த காற்று வாங்கி சுவாசிக்கும் நிலைமை நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதங்கம் புரிகின்றது.
      இன்ஷா அல்லாஹ், முயற்சி செய்வோம்.

      Delete
  4. இயற்கை வளங்களை விற்று காசாக்க , ஒரு சில தனிப்பட்டவர்களின் பை நிறைய, அனைத்து அதிரை பொது மக்களும் பாதிக்கப்பட வேண்டுமா? தண்ணீர் தேவையே பூர்த்தி செய்வதற்காக ,முன்பாவது மண்ணப்பன் குளம் என்ற ஒன்று இருந்தது . ஆனால் இப்பொழுது அப்படி ஒரு குளமும் இல்லை, குடங்களை தூக்கிக்கொண்டு எங்கு போவது?

    நாம் கேள்வி பட்டு இருப்போம்,, இப்பொழுது நமது தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுப்பதற்கு விவசாயிகள், சமூக ஆரவலர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று- இது எதனால்? அப்படி மீத்தேன் எடுப்பதற்கு அனுமதித்தால் நாளடைவில் கடல் நீர் விளை நிலங்களில் உட்புகும் என்பதனால் தான்.

    ஆனால் நமதூரோ கடலை சேர்ந்தே இருக்கிறது, ஒரு இடத்தில் ராட்சச இயந்திரங்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் போது மிக எளிதாக கடல் நீர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக உட்புகும். கிடைக்கும் கொஞ்ச நன்னீரும் குடிப்பதற்கு லாயக்கில்லாத உவர் நீராகும்.

    தண்ணீர் தேவைக்காக நமது மாநிலம் வருடம் முழுதும் பக்கத்து மாநிலத்தின் தயவிலேயே வாழ்ந்து வருகிறோம்... அதுபோல் அதிரையும் ,இருக்கும் கொஞ்ச நன்னீரையும் உப்பாக்கி குடிநீர் தேவைக்கு பக்கத்து ஊரை சார்ந்து இருக்கும் நிலைமைக்கு தள்ள வேண்டுமா ?

    சிந்தியுங்கள், ஒற்றுமையுடன் செயல்படுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதங்கம் புரிகின்றது.
      இன்ஷா அல்லாஹ், முயற்சி செய்வோம்.

      Delete
  5. ஜமால் காக்காவின் நல்லதொரு நினைவூட்டல் பதிவு.

    மண்ணப்பங்குளம் யாவரும் மறக்க முடியாத ஒரு குளம். நமதூருக்கே குடிதண்ணீரை பஞ்சமில்லாமல் கொடுத்த குளம்.எந்த ஊரிலும் இல்லாத சுத்தமான குடிநீர் வழங்கும் குளம். வருடம் முழுதும் வறட்சியில்லாமல் நீரை வாரிவழங்கிய குளம். இப்படி பெயர் வாங்கிய இந்த குளம் எப்படி வரண்டுபோனது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதங்கம் புரிகின்றது.
      இன்ஷா அல்லாஹ், முயற்சி செய்வோம்.

      Delete
  6. அதிரையின் நீர் நிலை இந்த அளவுக்கு மோசமாக போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை பெரும் பலான வீடுகளி; உள்ள போர்களில் இன்று சரியாக தண்ணீர் வருவது கிடையாது காரணம் பூமியில் நீரின் மட்டம் கீலே போய்விட்டது இதற்க்கு காரண்ம் என்ன? என்று யாரும் சிந்திக்கவில்லை இப்போதே இந்த நிலை என்றால் இனி வரபோகும் கோடைகாலங்களில் நமதூரின் நிலை என்ன? ஆகும் என்று தெரியவில்லை நமதூரை எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.

    வீதிகளில் மரம் வளப்போம் மழையை வரவழைப்போம் வரண்டு போம் பூமியை குளிரவைப்போம் வீட்டுக்கு வீடு மரங்களை வளர்ப்பதற்க்கு நாம் அனைவரும் முயற்ச்சி செய்வோம், நமதூர் பேரூராட்சியின் குடி தண்ணீரின் சுவையும் மாறிவிட்டது வரும் கோடைகாலங்களில் ஒவ்வொரு வீட்டு போர்களிலும் தண்ணீர் வருகிறதோ இல்லையோ நிச்சியம் காற்று வரும் என்பது மட்டும் உண்மை இன்று அதிரையில் உள்ள அனேக வீடுகளில் மீண்டும் இரண்டு மூன்று பைப்புகள கீலே இரக்கியுள்ளனர் என்பது தான் உண்மை, எனவே நமதூர் மக்கள் மத்தில் தண்ணீரைப்பற்றி ஒரு பெரும் விழிப்புணர்வு செய்யவேண்டி கால சூல் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுயுள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

    இதை யார் செய்வது எப்போ செய்வது எப்படி செய்வது என்பது கேள்விகுறி ? இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்

    என்றும் அன்புடன் அதிரை நலன் விரும்பி

    அதிரை M. அல்மாஸ்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதங்கம் புரிகின்றது.

      (இயக்கங்களையோ அரசியல் கட்சிகளையோ சேர்க்கவில்லை)

      நமதூர் மக்கள் அனைத்தும் ஒற்று நின்றால் இந்த தண்ணீர் பிரச்னையை வெறும் சுலபமாக தீர்த்து விடலாம்.

      நீங்களோ அல்லது நானோ இந்த பூனைக்கு மணிகட்டுவது என்றால் அது கியாமம் விடிந்துவிடும்.

      Delete
  7. Pls try to rain each home insa allah we will get water level up. Pls.. try start now......

    ReplyDelete
  8. Please try to save rain water .. insa allah we will get water level up... start now.......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதங்கம் புரிகிறது.

      எல்லோரும் பிரிந்து துஆ கேட்காமல், ஒற்றுமையுடன் ஒருவருடன் ஒருவர் இணைந்து கேட்போம்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.