.

Pages

Wednesday, March 26, 2014

அதிரை அருகே உள்ள பிரிலியன்ட் பள்ளிக்கு சிபிஎஸ்இ அங்கீகாரம் !

அதிரை அருகே உள்ள புதுக்கோட்டை [ உள்ளூர் ] கிராமத்தில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரிலியன்ட் பள்ளிக்கு அரசின் சிபிஎஸ்இ அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து இன்று பகல் பள்ளியின் அலுவலகத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலையார் சரோஜா மலைஅய்யன், ஒன்றிய கவுன்சிலர் திலகவதி சுப்ரமணியன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் முகம்மது மொய்தீன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நாடிமுத்து, புதுக்கோட்டை [ உள்ளூர் ] ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மணியரசர், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிகை நிருபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன், நிர்வாகி சுப்பையன், முதல்வர் ஈஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.


1 comment:

  1. வரவேற்கத் தக்கது, அடுத்து 2 கிராமத்தை தள்ளிவுள்ள பள்ளியில் அதிக வசூல் வேட்டை நடக்குது, அரசு பள்ளி நிலைமை மோசமாக இருப்பதால் தனியார் கல்வி வியாபாரம் படு ஜோர். கல்வி நிலைமை இப்படி இருக்க அம்மையார் உணவகம், டாஸ்மாக் திறப்பதில் அரசு ஆர்வமாக் உள்ளது. இப்போதைக்கு ஸ்கூல் பீஸ் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். ம்ம் பார்ப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.