.

Pages

Tuesday, March 11, 2014

வெறிச்சோடி காணப்படும் அதிரை பேருந்து நிலையம் !?

அரசியல் கட்சி தலைவர்கள் வருகை, பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டங்கள், புதிய நிர்வாகிகளின் புகைப்படங்கள், விளம்பரங்கள், வழிபாட்டுதல விழாக்கள் ஆகியவற்றை தொடர்ந்து திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கண்ணீர் அஞ்சலி என்று கட்அவுட், பேனர்கள் கலாசாரம் அதிரையில் சமீபகாலமாக அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்படும் பேனர்கள் சாலைகளை அடைத்துக்கொண்டு ரயில் பெட்டிகளை போல் தொடர்ச்சியாக காணப்பட்டு வந்தன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் எதிரொலியாக அதிரை பேருந்து நிலையத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த கட்அவுட்கள், ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதால் பேருந்து நிலையப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும், மாணவ மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



3 comments:

  1. ஊரை பார்த்தா வளர்ச்சி அடைந்த ஊர் மாதிரி தெரியலையே. இது தான் நமதூர் பேருந்து நிலையமா

    ReplyDelete
  2. எந்த ஊருப்பா இது, நம்ப முடியல - பெயர் பலகைவோடு போட்டோ போடுங்க - ப்ளீஸ்

    ReplyDelete
  3. விடியற்காலையில போட்ட எடுத்த எப்படி இருக்கும்....இப்படிதான் இருக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.