முன்னறிப்பின்றி ஏற்படும் மின் தடங்கள் குறித்து நமதூர் மனிதஉரிமை ஆர்வலர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் மின்சாரவாரியத்தை அணுகி காரணம் கேட்டதில், தவறு அதிரையில் இல்லை என்றும், மதுக்கூரில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 17-03-2014 அன்று மின்சார உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். அதன் பலனாக மின்சார வாரிய துரித நடவடிக்கை மேற்கொண்டு பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் அதிரையில் இரவு நேரத்தில் திடிரென ஏற்படும் மின் தடங்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.
Sunday, March 30, 2014
ஒரு கடிதத்தால் சாதித்த அதிரையர் !
முன்னறிப்பின்றி ஏற்படும் மின் தடங்கள் குறித்து நமதூர் மனிதஉரிமை ஆர்வலர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் மின்சாரவாரியத்தை அணுகி காரணம் கேட்டதில், தவறு அதிரையில் இல்லை என்றும், மதுக்கூரில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 17-03-2014 அன்று மின்சார உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். அதன் பலனாக மின்சார வாரிய துரித நடவடிக்கை மேற்கொண்டு பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் அதிரையில் இரவு நேரத்தில் திடிரென ஏற்படும் மின் தடங்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.
21 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Nalla kameade.................
ReplyDeleteeppo 90,96% mensaram thanneraivu !
ammavukku aappu eppo 100% sar
தம்பி உங்களுக்கு சரியாக பேச வரமாட்டேன்கிறது, அதனால் ஒரு மூடை வசம்பு வாங்கி வந்து, அந்த வசம்பு எல்லாம் தீரும் வரை உங்களுடைய நாக்கை அந்த வசம்பின் மேல் வைத்து நன்றாக தேய்த்து எடுங்கள்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதம்பி ஏன் திறந்து இருந்த கதவை மூடி விட்டீர்கள்?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசேக் அப்துல்லாஹ் இதில் என்ன நகைச்சுவையை நீங்கள் மட்டும் அறிந்து வயிறு வலிக்க சிரித்தீர்கள் என்று தெரியவில்லை. ஜமால் காக்காவின் பணி அளப்பெரியது. இதில் பயனடைந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை அறிந்து அடுத்த பின்னூட்டத்தை இடவும். இதற்குரிய கூலியை மறுமையில் இறைவன் அவர்களுக்கு வழங்குவானாக என்று துஆ செய்து இதுபோன்ற சமூக பிரச்சினையை சமூக அக்கறையோடு மறுமை சிந்தனையோடு அனுகிப் பாருங்கள் சேக்அப்துல்லாஹ்.
ReplyDeleteஇதுபோன்ற விளம்பரத்துக்காக இல்லாமல் பிறரையும் ஊக்குவிக்கும் வகையில் இடுகை செய்த அதிரை நியூஸ் குழுமத்தை மனதார பாராட்டுகின்றேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteதூற்றுபவர்கள் தூற்றட்டும், போற்றுபவர்கள் போற்றட்டும். எது நடந்தாலும் தரம் குறையாது.
This comment has been removed by the author.
ReplyDeleteஷேக் அப்துல்லா அதிரை நியூஸில் வெளியிடும் செய்திகள் எல்லாம் காமெடியாக உள்ளது என்று கூறி இருக்கும் முதல் நபர் நீங்களாக தான் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். எந்த செய்தியில் உங்களுக்கு வயிறு வலித்து சிரித்தீர்கள் என்று சொன்னால் மற்றவர்களுக்கு உங்களது கருத்துக்களுக்கு வயிறு குளுங்க சிரிப்பார்கள் உங்களை பார்த்து.
ReplyDeleteஎந்த செய்தி பிரிவாக இருந்தாலும் சரி அதனை திருத்துவதற்கும்,மறுப்பு செய்தியோ அல்லது பிறகருத்துகள் இடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அதனால் உங்களுக்கு காமெடி செய்தியாக இருப்பின் இத்தளத்தின் முகவரி உள்ளது அல்லது தொடர்பு எண் இருக்குமாயின் அவர்களை தொடர்பு கொண்டு சிறித்ததால் மருத்துவ செலவுக்கு உதவி கேளுங்கள்.
ஜமால் காக்காவின் தனது பணியை தொடர்ந்து செய்ய எனது மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!!!
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteசகோதரர் சேக் அப்துல்லா அவர்களுக்கு, ஜமால் காக்காவின் சமூக சேவைகள் பற்றி பரவலாக அனைவரும் அறிந்திருப்பார்கள். அவர்களின் பொதுநல செயல் பாட்டை பாராட்ட விட்டாலும் குறைகானாது இருந்தாலே ஏற்றமாக இருக்கும். அடுத்து சொல்வதானால் அதிரை நியூஸ் வெளியிடும் செய்திகள் அனைத்தும் நகைச் சுவையாக இருப்பதாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பொதுநலனில் அக்கறைகொண்டு அனைத்து அதிரை மக்களும் மற்றபிற மக்களும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டி மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் செய்திகளை சேகரித்து தளத்தில் பதிந்து வருகிறோம். நாங்கள் தரும் செய்தியில் குறைபாடு இருப்பின் பொது நாகரீகம் கருதி எங்களது மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம். அதை விடுத்து இப்படி பின்னூட்டத்தில் எழுதுவது நாகரீகம் அல்ல.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேர்வு நேரத்தில் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள். ஆர்ப்பாட்டம், தர்ண போராட்டம் இல்லாமல் அமைதியான நடவடிக்கை - தொடரட்டும் உங்கள் சமுதாயபணி.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
DeleteK.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஎப்பேர்பட்ட கருணாநிதியே பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு பிரதமருக்கு கடிதம் எழுதியே காலத்தை ஓட்டினார்.
ReplyDeleteகடிதம், லெட்டர், கடுதாசி மட்டுமல்லாமல் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு அளித்து தகவல் பெற்று பகிரங்கப்படுத்தும் நபர்கள் நமதூரில் அதிகரிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய அவா.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அத்தகைய முயற்சியில் ஈடுபடவேண்டும்... இளங்கன்று பயமறியாது.
சகோ.மாஹிர்... ஆர்டிஐ பத்தின விழிப்புணர்வு நம்மூரில் அதிகமாக இல்லை என்பதாக அறிகிறேன்... தேர்தல் நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்...
Deleteமேற்கண்ட இந்த இரவு நேர மின்வெட்டு சம்பந்தமான இஷ்யூவிற்கு திரு.ஜமால் முஹம்மது காக்காவிற்க்கு நன்றி..
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஷேக் அப்துல்லா அதிரை நியூஸில் வெளியிடும் செய்திகள் எல்லாம் காமெடியாக உள்ளது என்று கூறி இருக்கும் முதல் நபர் நீங்களாக தான் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். எந்த செய்தியில் உங்களுக்கு வயிறு வலித்து சிரித்தீர்கள் என்று சொன்னால் மற்றவர்களுக்கு உங்களது கருத்துக்களுக்கு வயிறு குளுங்க சிரிப்பார்கள் உங்களை பார்த்து.
ReplyDelete