.

Pages

Friday, March 14, 2014

பேரூராட்சி தலைவர் அஸ்லம் இல்லத்திற்கு வருகை தந்த TR பாலு முன்னிலையில் திமுகவில் இணைந்த தேமுதிகவினர் !

இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த தஞ்சை தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்கள், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது ஆய்ஷா மகளிர் அரங்கத்தில் கூடியிருந்த பெரும்பாலானோரிடம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவு தர வேண்டினார்.

இதில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் T.R. பாலு அவர்களின் முன்னிலையில் தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்த 15 க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.


6 comments:

  1. தலைப்பை முழுமையா படிக்காததால, அஸ்லம் காக்கா திமுகல இப்பதான் இணைஞ்சாங்களான்னு டவுட்டு வந்துருச்சு.

    செய்திக்கு நன்றி!
    தகவலுக்கு நன்றி!!
    பதிவுக்கு நன்றி, நன்றி, நன்றி!!!

    (இதை மறக்கா போடக்கூடாது... சொல்லிபுட்டேன்)

    ReplyDelete
  2. DMK பக்கம் அஸ்லம் காக்கா. TNTJ இப்ப ADMK பக்கம். அஸ்லம் காக்கா இப்ப TNTJ பக்கம். ஒரே குழப்பம். யாருக்கு ஒட்டு போடணும்.

    ReplyDelete
  3. \\DMK பக்கம் அஸ்லம் காக்கா. TNTJ இப்ப ADMK பக்கம். அஸ்லம் காக்கா இப்ப TNTJ பக்கம். ஒரே குழப்பம். யாருக்கு ஒட்டு போடணும்.\\
    ஆம் ஆத்மிக்குப் போடலாம்ம்

    ReplyDelete
    Replies
    1. முன்னாள் இ.யூ.மு.லீக். பின்னால் த.மு.க. இடையில் யாரோ ஒரு ஷெரீப் உடைய கட்சி. இந்நாள் ஆம் ஆத்மி. நாளை ? எதிலும் நிலையில்லையே ?

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    இந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.

    யார், யாருக்கு எந்தந்த பக்கம் திரும்பனுமோ அது அவர்களுடைய சொந்த உரிமை, ஆனால் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    ReplyDelete
  5. இவர்கள் பதவிக்காக யாரையும் பார்ப்பார்கள், காங்கிரசின் ஆதரவோடு பதவிகளை அனுபவித்து ஊழல் செய்து கோடிகளை சுருட்டிய முதலைகள். ஸ்ரீபெரும்பதூர் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? அப்படி உருப்படியா செய்து இருந்தால் அங்கே போட்டிஇடலாம், ஏன்? கள்ளர் ஓட்டு + சிறபான்மை மக்கள் ஓட்டு வாங்கி பதவில் இருக்கனுமுன்னு ஆசை, இதுவரை 5 கப்பல் வாங்கியாச்சு , இன்னமும் வாங்கனுமா, போதும் சார் எங்களை விட்டுடுங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.