.

Pages

Saturday, March 22, 2014

ஆப்பிள் மேல் உள்ள கெடுதலை உணர்த்தி விற்கும் முத்துப்பேட்டை பழ வியாபாரி ! [ படங்கள் இணைப்பு ]

முத்துப்பேட்டை பகுதி பழக்கடைகளுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யபப்டுகிறது. ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்கப்படும் ஆப்பிள்கள், விற்பனை கவர்ச்சிக்காக ஆப்பிள் மீது பாலிஸ் கொடுப்பது, தனித்தனியாக உறைகள் மாட்டுவது, ஸ்டிக்கர்கள் ஒட்டி பார்வையாக அமைப்பது போன்ற செயல்களில் ஆப்பிள் மொத்த வியாபாரிகள் செய்து வருகிறார்கள். ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும் மெழுகுகள் உடலுக்கு கெடுதல் என்று உணராமல் மக்கள் ஆப்பிள்களை ஆசையுடன் சென்று அப்படியே கடித்து சாப்பிடுவதும,; சிலர் பெயரளவில் தண்ணீரில் நனைத்துவிட்டு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பலவகை கெடுதல்கள் எற்படுவதை உணராமல் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஆய்வில் ஆப்பிள் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும,; பல்வேறு கெடுதல்கள் உடல் நலத்திற்கு ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனாலும் மக்கள் கடைகளில் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதால் வேறு எந்தவொரு மாநிலத்திலும் விற்காத அளவிற்கு தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்ட் அருகில் பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவர் கடையில் ஏகப்பட்ட பலவித ரகங்கள் கொண்ட ஆப்பிள்கள் குவிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிக அளவில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பாலகுமார் ஒவ்வொரு முறையும் தான் கடையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டி அதனை கெடுதலையும் உணர்த்துகிறார். மேலும் ஆப்பிள் சாப்பிடும்பொழுது இப்படி சுரண்டிவிட்டு சாப்பிடனும் என்றும,; அல்லது தோலை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். மக்களின் உடல் நலத்தில் மீது அக்கறை கொண்டு வியாபாரம் செய்யும் பாலகுமார் கடையில் ஆப்பிள் வாங்குவதற்கென மக்;கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களும் பாலகுமாரை பாராட்டி செல்கிறார்கள்.

படம் செய்தி :
1. ஆப்பிள் மீது உள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டும் பாலகுமார்.
2. முத்துப்பேட்டை பாலகுமார் பழக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆப்பிள்கள்

நன்றி : 
'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை

4 comments:

  1. மனிதா! வாழ்க உமது நேர்மை, வாழ்த்துகிறேன். இன்னும் நீ என் சகோதரனாக மாறினால் சந்தோஷபடுவேன்.

    ReplyDelete
  2. பிற பழ வியாபாரிகளுக்கு முன்மாதிரியாய் திகழ்கிறீர்கள்.

    ReplyDelete
  3. நேர்மைக்கு பாராட்டுக்கள் - தகவலுக்கும் நன்றி:

    ReplyDelete
  4. நான் கொதிக்கும் சுடுநீரில் கழுவி சாப்பிடுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.