ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள 12-வது வேட்பாளர்கள் பட்டியலில் தமிழகத்தில் அரக்கோணம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், தேனி, திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதேபோல, அடுத்த பட்டியலில் தஞ்சாவூர் தொகுதியும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. எனவே, வேட்புமனுக்கள் பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் சுமார் 10 பேர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். இவர்களில் இருவரை மட்டுமே போலீஸார் உள்ளே அனுமதித்தனர். இரு மனுக்களை வாங்கிச் சென்றனர்.
இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் உமர் தம்பி, துணை அமைப்பாளர் பழனிராஜ் விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைமையிடத்திலிருந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வரும் என்றும், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியினரிடம் கலந்தாலோசனை செய்து ஏப். 1 அல்லது 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
நன்றி : தினமணி
புகைப்படம் : அதிரை நியூஸ்
தேர்தலில் போட்டி இட வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அடித்த புயலுக்கெல்லாம் அசையாமல் ஒரே இடத்தில் இருந்திருந்தால் எங்கேயோ போயிருக்கலாம். மீண்டும் புயல் வராது என்று சொல்ல முடியாது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
தேர்தலில் போட்டி இட வாழ்த்துக்கள்
ReplyDeleteஆம் ஆத்மி வேட்பாளராக உமர்தம்பி காக்கா தேர்ந்தடுக்கப்பட்டால் அதிரை வளர்ச்சி பெரும். அனைத்து சகோதரரூம் ஊர் நலன் கருதி இவரை ஆதிரிக்க வேண்டும் . நம்மவர் ஒருவர் வேட்பாளராக நிற்பது நமது ஊருக்கு பெருமை அல்லவா விருப்பு, வெறுப்பு மறந்து இவரை நமதூர்காரர் என்ற வகையில் ஆதிரிப்போம், வெற்றி செய்வோம்.
ReplyDeleteஆம் ஆத்மி சீட் கொடுக்காட்டியும் தனிச்சு நின்னு நிரூபிப்பாப்ல நம்ம காக்கா. கவலையை விடுங்க.
ReplyDeleteTanjore Aam Admi Candidate. Mr. S. Palanirajan
ReplyDeletehttp://www.aamaadmiparty.org/13th-candidate-list-announced-2014-lok-sabha-elections