சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்று செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் ரூபாய் 13 ஆயிரம் மதிப்பீட்டில், இஸ்லாமிய வேத நூலாகிய குரான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 பிரதிகளை, மாற்று மத சகோதரர்களுக்கு இலவசமாக வழங்க அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது அவர்களிடம் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டினார். அதன்படி உரியவரிடம் போய் சேர்வதற்காக அதிரையில் இயங்கி வரும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து வழங்கி வருகிறார்.
இதுகுறித்து அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
முதலில் லண்டன் வாழ் 'சமூக ஆர்வலர்' இம்தியாஸ் அவர்களுக்கு நன்றி. இதுபோன்று ஏனைய இஸ்லாமிய சகோதரர்களும் உதவ முன்வர வேண்டும். சமுதாயத்தில் நிலவி வரும் இஸ்லாம் குறித்து தவறான புரிதல்களை போக்கும் விதமாக இந்நூல் பிற சகோதரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இவை இஸ்லாமிய மார்க்கம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மாற்றுமத சகோதரர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர் என்றார்.
Very good job .... I appreciate him. .
ReplyDeleteVery good job .... I appreciate him. .
ReplyDeleteநல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்.......................
ReplyDelete