.

Pages

Wednesday, March 12, 2014

அதிமுக வேட்பாளர் பரசுராமன் அவர்களோடு அதிரை நியூஸின் நேர்காணல் ! [ காணொளி ]

தேர்தல் களம் - 2014 :
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்குவதை அடுத்து வேட்பாளர்கள் மத்தியில் இம்முறை கடுமையான போட்டி ஏற்படும் என பரவலான கருத்து நிலவி வருகிறது.

கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் வேட்பாளர்களுக்காக ஆரம்ப கட்ட பிராச்சார பணிகளை அமைதியாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று முக்கிய சமுதாய அமைப்புகளையும், ஊர் முக்கியஸ்தர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

தஞ்சை பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கணிசமான அளவில் சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வேட்பாளர்களின் வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்ககூடிய மாபெரும் சக்திகளாக திகழ்வதால் கட்சிகள் பல சிறுபான்மை இனமக்கள் கணிசமாக வாழக்கூடிய பகுதியாக கருதப்படுகிற அதிரையை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி தஞ்சை தொகுதியின் அதிமுக வேட்பாளராக திரு கு. பரசுராமன் அவர்களை களமிறக்கி உள்ளது. இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த தஞ்சை தொகுதியின் வேட்பாளர் திரு. பரசுராமன் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்...

கேள்விகள் :
1. தஞ்சை தொகுதியின் வேட்பாளராகிய உங்களை பற்றிய சிறு அறிமுகம் ?
2. தொகுதி மக்களுக்காக என்னென்ன வாக்குறுதிகளை வழங்கி பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
3. அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் விரைவில் நிறைவேற தங்களின் பங்கு எவ்வாறு இருக்கும் ?
4. மத்தியில், மாநிலத்தில் இஸ்லாமியர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அதிகப்படுத்தி தருவது தொடர்பான கோரிக்கை நிறைவேற நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன ?

வேட்பாளரின் பதில் இதோ...

11 comments:

  1. Tntj admk ukku vaakku keatppathu neyayama? Oppanaka modekku vaakku keatppathu thanea?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.


    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. TNTJ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ADMK கட்சிக்கு ஆதரவு கொடுக்க, அதன் வேட்பாளர் இந்த அமைப்பின் 'தவ்ஹீத்' பள்ளியில் வைத்துப் பேட்டி கொடுக்கிறார். 'இதய தெய்வம்' என்பது போன்ற வாக்குகளைப் பயன்படுத்துகின்றார் இந்தத் தவ்ஹீத் பள்ளியில்!

    இதற்கிடையில், DMK கட்சியைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனியமர்வு! இதுதான் உங்கள் அரசியல் கொள்கையா?

    என்னப்பா ஒன்னும் புரியலையே!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை தவ்ஹித் ஜமாத் தலைவர் அவர்களுக்கு.
    ஆனா மூனா குலாம்முகமது . மட்டும்மல்ல நிறைய சகோதரர்கள் என்னிடம் கேட்க்க கூடியகேள்வி.நான் கேட்க்க கூடிய கேள்வி தவ்ஹீத் அதிரையில் முறையாக நடத்துகுரீர்களா இல்லை வேற வேலை ஏதும் செய்குரீர்களா என்ன கொடுமை இமாம் இருக்ககூடிய இடத்தில் தூய இறைவணக்கம் செய்ய கூடிய இடத்தில் தூய்மையற்ற ஒன்டு கல் பிடிக்காத மாற்று மத சஹோதரர்களை எப்படி அனுமதித்தீர்கள் பள்ளிகக்குள்ளே?? இருந்துக்கொண்டே பகிரங்க பேட்டி கொடுக்கிறார்கள். தமிழகத்தின் காவல் தெய்வம்என. இதற்கு சரியான பதில்வேண்டும் அருகில் சகோதரர் அன்வர் அலி இருக்கிறார் பின்னாடி ஒன்னும் தெரியாதவர் போல் நிக்கிறார் . சகோதரர்அஸ்ரப்தீன்.இல்லையா ஊரில்? விபரம் தேவை .
    அஸ்ஸலாமு அழைக்கும்
    ஆனா மூனா குலாம்முகமது

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் முஸ்ஸலாம்

      அன்புச் சகோதரர் குலாம் முஹம்மது

      // பள்ளிகக்குள்ளே?? இருந்துக்கொண்டே பகிரங்க பேட்டி கொடுக்கிறார்கள். //

      அதிரை நியூஸ் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் பேட்டி எடுத்து வருவது வழக்கமான ஒன்று என்றாலும், நீங்கள் கூறியிருப்பது போல் தொழுகை நடத்திவரும் உள்புற பள்ளியில் வைத்து எடுக்கப்பட வில்லை. பள்ளியின் வெளிப்புற வரண்டாவில் வைத்துதான் எடுக்கப்பட்டது.

      Delete
  5. அரசியல் வேறு நட்பு வேறு நாங்கள் எந்த கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அல்ல

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை தவ்ஹித் ஜமாத் தலைவர் அவர்கலே.
      நான்இரண்டுகேள்விவைத்துள்ளேன்இரண்டுகேள்விக்குமே பதில் எழுத வில்லை. அரசியல் வேறு நட்பு வேறு நாங்கள் எந்த கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அல்ல என்று பதில் அளித்துள்ளீர்கள் அது எப்படி.இது பதில் அல்ல நான் தவ்ஹீது இயக்கத்தை சார்ந்தவன் அல்ல, தவ்ஹீதை பின்பற்றுபவன். ஆகையால் இனி இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் .

      அஸ்ஸலாமுஅழைக்கும்
      இப்படிக்கு. ஆனா மூனா.
      குலாம்முகமது

      Delete
  6. ததஜ என்னும் உருவாகி வரும் தனி மதத்தில் அரசியலுக்காக காவல் தெய்வம் ஏற்படுத்துக் கொள்வதில் தவறில்லை போலும். எனினும் எங்களுடைய தீனுல் இஸ்லாத்தில் எதற்காகாவும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்று நாங்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.

    புதிய மதத்தின் ‘காவல் தெய்வ ஏகத்துவம்’ சந்தி சிரிக்கிறது. எங்களுடைய இஸ்லாமிய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்களை அழைக்கக்கூடாது என்று முஸ்லிம்களாகிய நாங்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். ததஜ மதத்தில் அவ்வாறில்லை போலும்.

    அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
    ஷார்ஜா, அமீரகம்

    ReplyDelete
  7. அவர்கள் மதம் அவர்களுக்கு நம் வழி நமக்கு. கடவுளே இல்லை என்று சொல்கிற கருணாநிதியை மீலாது மேடைகளில் ஏற்றும்போது இந்த புத்தி எங்கே போனது

    ReplyDelete
  8. Dear Adiraiselvan

    மீலாது மேடையில் கருணாநிதியை ஏற்றியது தவறு என ஒப்புக்கொண்டால், ததஜ வின் "காவல் தெய்வம் அம்மா" என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

    ReplyDelete
  9. கருணாநிதியின் மீது கொண்ட ஈமான் லேசில் போகாது போலிருக்கிறது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.