இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த திரு. T.R. பாலு அவர்கள், திமுக நகர நிர்வாகிகளின் மரியாதைகளை ஏற்றுக்கொண்டதோடு கூட்டணி கட்சியான மனிதநேய கட்சியின் அலுவலகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப் இல்லம், கீழத்தெரு ஜமாத் பொருளாளர் NMS. மன்சூர் மற்றும் 'சமூக ஆர்வலர்' மான் சேக் இல்லம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், நெசவுத்தெரு சங்கம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளி ஜமாத், கடற்கரைதெரு ஜமாத், தரகர் தெரு ஜமாத் ஆகியவற்றிற்கு கட்சியினரோடு நேரடியாக சென்று அதன் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது அந்தந்த மஹல்லா நிர்வாகிகளும், மனிதநேய கட்சி மற்றும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளும் அன்புடன் வரவேற்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.
இதே உற்சாகம் தேர்தல் முடிந்தும் இருக்க வேண்டும். அதிரையில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது, நிலத்தடி நீர் மட்டம் 110 அடிக்கு கீழ் இறங்கி விட்டது. எல்லோர் வீடுகளிலும் புதுப்புது போர் தோண்டுதல், பழைய போரை சரி செய்தல், போதாக் குறைக்கு மேலும் குழாய்களை இறக்குதல் போன்ற வேலைகள் நடந்து வருகின்றது. மேலும் நமதூர் பெரூராட்சியால் தோண்டப்பட்ட பல ஆழ்குழாய் கிணறுகளில் நீரின் ஊற்று போதுமானதாக இல்லை.
இதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? கோடை கால மழை பெய்தால் ஒழிய வேறு ஒன்றும் செய்துட முடியாது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அதிராம்பட்டினம்-614701.
இவர் எல்லா முஹலாக்கும் சென்று கோரிக்கை என்ன வென்று கேட்டு அதனை ஏற்று கொண்டாராம் இதை போல் ஸ்ரீ பெருமபதூர் மக்களிடம் கேட்டு பார்க்கலாமே! கேஜ்ரிவால் பாணியில் உபசரிக்கப்படும், பழைய நண்பர் காங்கிரசு மனிதரை பார்க்க வில்லையா? மகளுக்கு மக்களே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்!
ReplyDelete