.

Pages

Wednesday, March 19, 2014

அதிரை SAM நகர் பகுதி குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து பேரூராட்சி உதவி இயக்குனர் நேரில் ஆய்வு ! [ காணொளி ] !

அதிரை பேரூராட்சியின் 20 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி SAM நகர். நாளுக்கு நாள் இந்த பகுதிகளில் அதிகம் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. பேரூராட்சிக்கு அதிக வருமானம் தரக்கூடிய முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வந்தாலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளாகிய குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கி காணப்பட்டன. இதற்காக இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களை அணுகி அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவற்றை கவனத்தில் எடுத்துகொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகம் சிஎம்பி வாய்க்கால் அருகே உள்ள பிரதான குழாயிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் சுமார் 800 மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரூபாய் 2.50 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த பணிகள் இன்று முதல் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை பேரூராட்சியின் உதவி இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், செயல் அலுவலர் முனியசாமி, 21 வது வார்டு உறுப்பினர் இப்ராஹீம், 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது செரிப், 20 வது வார்டு உறுப்பினர் சித்ரா, ஒப்பந்ததாரர் வீரையன், பள்ளி நிர்வாகி இர்பானுதீன், சமூக ஆர்வலர் சுல்தான் நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பகுதி மக்களின் கோரிக்கையை துரிதமாக செயல்படுத்த உதவிய அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் இக்கோரிக்கையை அப்பகுதியினரோடு சேர்ந்துகொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்த சமூக ஆர்வலர் சுல்தான் நாசர் ஆகியோர் நடைபெறும் பணிகள் குறித்து நம்மிடம் கூறுகையில்...







2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    உன்னதமான வேலை இது, உணவு இல்லாவிட்டாலும் நீர் இல்லாமல் இருக்க முடியாது, நமது சேர்மேன் அஹ்மத் அஸ்லம் அவர்களின் இந்தச் செயல் பாராட்டப் படவேண்டியது.

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. SAM நகர் மக்களின் குடிநீர் தேவையே பூர்த்தி செய்து கொடுத்த நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.