.

Pages

Friday, March 21, 2014

இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா !?

கால காலமாக நமதூரில் இனம் தெரியாத ஆட்கள் எல்லாத் தெருக்களில் நடமாடுவதையும், தங்கி இருந்து வேலை செய்வதையும் பார்க்கலாம். நமதூர் மக்களுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வந்தாலும் அதை பற்றி யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வது கிடையாது, அப்படி என்றால் அவர்கள் யார்? உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், நீங்கள் தெரியாது என்றே சொல்வீர்கள், காரணம் அவன் எந்த ஊராக இருந்தா நமக்கென்ன என்ற தோரணையில் போய்விடுகின்றது, ஏனென்றால் நாமும் சிலவேளைகளில் வெளியூர்களில் நடமாடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடுகிறது, அதனாலாயோ! வேறு என்னவோ!!

சாதரணமாக நாம் வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பி வரும் வரைக்கும் பஸ் டிக்கட்டை பத்திரமாக வைத்துருக்கவேண்டும், மேலும் நம்மை பற்றிய முழு விளக்கமும் தெளிவாக விளக்கும் வகையில் நமக்கு உண்டான அடையாள அட்டைகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் சிலர் வெளியூர்களில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து நிரந்தரமாக தங்கி இருந்து தொழில் நடத்தி வருவார்கள், மாதம் ஒருமுறை வீடு வந்து போவார்கள், இவர்களும் அவர்களுக்கு உண்டான அடையாள அட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ன்னும் சிலர் தங்களிடம் எந்த ஒரு அடையாள ஆவணமும் இல்லாமல் தினம் தினம் ஒவ்வொரு ஊராக போய் வியாபாரம் செய்வார்கள், இது மிகவும் தவறு.

உதாரணத்திற்கு.
ருத்தன், குடிசை/சில்லறை தொழில் விஷயமாக வெளியூர்களில் உள்ள பல ஊர்களுக்கு சென்று தெரு தெருவாகவோ அல்லது ஊரின் ஒரு மையப்பகுதியிலோ வியாபாரம் செய்வதாக இருந்தால் கீழ்க் கண்ட நிபந்தனைகளை அவன் சரிசெய்து கொண்டு போக வேண்டும்.

நிபந்ததனை ஒன்று.
வனின் சொந்த ஊர் காவல் நிலையத்தில், குடிசை/சில்லறை வியாபார விஷயங்களையும்,  போகப் போகின்ற ஊரின் பெயரைச் சொல்லி (No Objection Certificate) தடையில்லா சான்றிதழை பெற விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அவனிடம் எந்த வித குற்றச் செயல் இல்லை என்றும் வெளியூர் போய் வியாபாரம் செய்யலாம் என்று தடையில்லா சான்றிதழை வழங்குவார்கள். இதோடு சேர்த்து அவன், அவனுடைய எல்லா அசல் அடையாள அட்டைகளை பத்திரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிபந்தனை இரண்டு.
ந்த தடையில்லா சான்றிதழை வைத்துக்கொண்டு, அவன் எந்த ஊருக்கு போக இருக்கின்றானோ அங்கு போய் அவனுடைய வியாபாரத்தை துவங்கும்முன் அங்குள்ள காவல் நிலையத்தில் இந்த தடையில்லா சான்றிதழை காண்பித்து (Endorsement) செய்ய வேண்டும், அதாவது தடையில்லா சான்றிதழின் பின் புறம் Approval-ஆதரவு, Support-சம்மதம் என்று ரப்பர் ஸ்டாம்ப்பினால் காவல் துறை முத்திரை இட்டு கையொப்பமிட்டு தருவார்கள்.

நிபந்ததனை மூன்று.
வைகளை பத்திரமாக வைத்துக் கொண்டு வியாபாரத்தை தெரு தெருவாகவோ அல்லது ஊர் மையப்பகுதியிலோ துவங்க வேண்டும். Consumer-நுகர்வோர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், யாரும் சந்தேகப்பட்டு விசாரித்தால் தடையில்லா சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் ஒருநாள் தங்க நேரிட்டால் காவல் துறையினரிடம் அனுமதி கோர வேண்டும். வேலையை முடித்துக் கொண்டு ஊரு திரும்பியதும், உள்ளூர் காவல் நிலையத்தில் திரும்பி வந்த செய்தியை தெரிவிக்க வேண்டும். இதுதான் முறை ஆனால் இதை யாருமே செய்வது கிடையாது.

நமதூரில் என்ன நடக்குது?
மதூரில் ஒரு நாளைக்கு தெருத் தெருவாக ஆயிரத்து எட்டு பழ வண்டிகள், பழைய இரும்பு சாமான்கள் வண்டிகள், ஆடைகள்/துணிகள் இவைகளை சுமந்து செல்லும் வடநாட்டு இளைஞர்கள், நாங்க அங்குருந்து வருகின்றோம்/இங்குருந்து வருகின்றோம் என்று சொல்லி பதிவு இல்லாத சில எண்டர்ப்ரைசஸ் பெயரைச் சொல்லி சிறு சேமிப்பில் கவர்ச்சிகரமாக தங்க நகைகள்/வீட்டு சாமான்கள், ஏதோ ஒரு ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பது, யாசகம் என்ற பெயரில் வருவது, இன்னும் அநேகர் இப்படி வந்த வண்ணம் இருக்கின்றனர், இவர்களைப்பற்றிய விபரங்களை யாராவது குறுக்கு விசாரணை செய்தது உண்டா? இந்த விஷயத்தில் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, இதில் ஆண்கள் மட்டும் இல்லை, பெண்களுக்கும் உரிமை இருக்கின்றது, பெண்களும் எல்லா விஷயத்திலும் முழு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 

மதூரில் வீடுகளைக் கட்டுவதற்கு வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் கட்டிடப் பணியாளர்களை வரவழைத்து இங்கேயே தங்க அமர்த்தி வேலைகளை வாங்கி வருகின்றனர். மேலும் பலர் வாடகைக்கு ஆட்களை அமர்த்தி வருகின்றனர்.

ப்படி வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வேலைக்கு ஆட்களை வரவழைத்து அவர்களை நமதூரில் தங்க வைக்கும் உரிமையாளர்களும் சரி, ஒப்பந்தக் காரர்களும் சரி, நீங்கள் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும், வேலையில் இருக்கும்போதும் வெளியில் நடமாடும்போதும் கண்ணியமாக நடந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும், அடுத்த வீட்டு கதவுகளை தட்டக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும், அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், உங்களிடம்தான் வேலைசெய்கின்றனர் என்பதற்கு அத்தாட்ச்சியாக அவர்களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்க வேண்டும், அவர்களைப் பற்றிய எல்லா முழு விபரங்களும் உங்களிடம் இருக்க வேண்டும், அவைகளைப்பற்றிய விபரங்களை காவல் துறையில் கொடுத்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். நமதூரில் எத்தனை உரிமையாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்?

ரு இந்தியன், இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் போய் வேலை செய்யலாம், தங்கலாம், அவனுக்கு முழு உரிமை உண்டு, எந்த ஒரு தடையும் இல்லை, ஆனால் பாதுகாப்பு கருதி ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று இந்திய காவல் துறை சட்டம் எச்சரிக்கின்றது.

வெளியூர்களிலும், நமதூரிலும் அவ்வப்போது நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை பார்க்கும்போது வெளியூர் கைவரிசை ஓங்கி இருப்பது நன்றாக தெரிகிறது. இது நாளுக்கு நாள் பல ஊடக வாயிலாக நாம் காணமுடிகின்றது, சந்தேகப்படும்படியாக அது யாராக இருந்தாலும் சரி, கொஞ்சம்கூட தயங்காமல் அவர்களை கூப்பிட்டு விசாரிப்பதில் தவறு ஏதும் இல்லை, முரண் உண்டாகும்படி இருந்தால் உடனே ஊர் காவல் துறைக்கு தெரியப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில வேளைகளில் வங்கி ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள், அஞ்சல்துறை ஊழியர்கள், வாக்கெடுப்பு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள், கேஸ் இணைப்பு ஊழியர்கள், இன்னும் பல நிறுவன ஊழியர்கள் நம் வீட்டுக்கு எதோ ஒரு வேலையாக வரக்கூடும், அவர்கள் அத்தனைபேரும் பார்த்தமுகமாக இருப்பார்களோ அல்லது இல்லையோ, எது எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து தங்களை யார் என்று உறுதி படுத்தின பின்னரே தாங்கள் வந்த நோக்கத்தை நம்மிடம் சொல்ல வேண்டும், இது தான் முறை.  

பொதுமக்களே நன்றாக சிந்தியுங்கள், பெரும்பாலும் இதுமாதிரி தவறுகள் நடக்க காரணமாக இருப்பவர்கள் அந்தந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்களே, எது எதுவுக்கோ நேரத்தை வீணாக செலவு செய்யும் நீங்கள் இதுக்கு கொஞ்சநேரம் செலவழித்தால் அது உங்களுக்கு மட்டும் இல்லை நம் ஊருக்கே நல்லதுதானே.

எடுத்துச் சொல்வது எங்கள் கடமை, விழிப்புணர்வுடன் இருப்பது உங்கள் கடமை.

இப்படிக்கு .
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.                           
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.

28 comments:

  1. அருமையான விழிப்புணர்வை எடுத்துச்சொன்ன நண்பர் K.M.A. ஜமால் முஹம்மது.அவர்களுக்கு நன்றி! நன்றி!

    ReplyDelete
  2. தகுதியானவர் தரும் தகுதியான விழிப்புணர்வு.

    ReplyDelete
  3. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் இச் செய்தியே செய்தி தாள் மூலமாக மக்களுக்கு விளக்கி கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
    நமதூரில் ஒவ்வொரு தெருக்களிலும் சீட்டு பணம் வசூலிக்க வரும் நபர்களை பார்க்கலாம். அதில் ஒரு சில சீட்டு பணம் வசூலிக்க வருபவன் என்ன செய்வான் என்றால் நமது பெண்களிடம் சர்வ சாதரணமாக பேசுவான். நீங்க நல்ல இருகிங்களா, உங்க குடும்பத்தில் எத்தனை பேரு, உங்களுக்கு பிள்ளை இருக்க, கல்யாணம் ஆகிடுச்ச, உங்க மாப்பிள்ளை எங்கே இருக்கார், என்ன வேலை, சம்பளம் எவ்வளவு என்றெல்லாம் கேட்டுவிட்டு சென்றுவிடுவான், ஓவ்வொரு நாளும் அவளும், இவனும், பேச ஆரம்பித்தவர்கள் ஒரு கட்டத்தில் கள்ளத்தொடர்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்திற்கும், தெருக்கும், சமுதாயத்திற்கும், கெட்டபெயர் உருவாகும் நிலை ஏற்படுகிறது. புதிதாக வரும் நபர்களிடம் அதிகமாக பேச்சு வார்த்தை கூடாது, மீறி பேசினால் தவறுகள் நடப்பதற்கான அறிகுறிகளை காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து நன்றி.

      ஒத்துழைப்பு தேவை.

      Delete
  4. அருமையான கட்டுரை.தமிழகத்தில் அதிகமாக கிரிமினல் குற்றங்கள் நடப்பதே இப்படி வெளிமாநில கட்டிட தொழிலாளிகலால் தான் நம்ஊருக்கு இவர்கள் தேவையில்லை அதிகமான வீடுகளில் ஆண்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் பலபிரச்சினை ஏற்பட வழிவகுக்கும்.கட்டுரையில் கூறிய நடைமுறைகளை கடைப்பிடிக்க கூடியவர்களும் அல்ல நம்ஊர் மக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஒத்துழைப்பு தேவை.

      Delete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஒத்துழைப்பு தேவை.

      Delete
  6. இவற்றை நோட்டீஸ் அடித்து ஊரில் விநியோகிக்க வேண்டிய அவசியமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஒத்துழைப்பு தேவை.

      Delete
  7. மிகவும் பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஒத்துழைப்பு தேவை.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அருமையான தகவல் -நன்றி, கண்டிப்பாக விழுப்புணர்வு தேவைதான், நம்ம ஊர் மக்களும் குற்ற செயலில் ஈடு படுகிறார்கள் அவர்களுக்கும் சாட்டை அடி விழும் போல் இரண்டு வரி சேர்த்து இருக்கணும். போலீஸ் காரர் மாமுல் கேட்பதால் நிபந்தனை இரண்டு சொன்னதை பின்பற்றுவது கடினம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      ஒத்துழைப்பு தேவை.
      கிடைக்குமா?

      Delete
  10. அருமையான விழிப்புணர்வை எடுத்துச்சொன்ன நண்பர் K.M.A. ஜமால் முஹம்மது.அவர்களுக்கு நன்றி! நன்றி!

    ReplyDelete
    Repliesகோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.22 March 2014 15:25
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    Delete
    Reply

    ReplyDelete
  11. அருமையான விழிப்புணர்வை எடுத்துச்சொன்ன நண்பர் K.M.A. ஜமால் முஹம்மது.அவர்களுக்கு நன்றி! நன்றி!

    ReplyDelete
    Repliesகோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.22 March 2014 15:25
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    Delete
    Reply

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அருமையான விலை மதிப்பற்ற கருத்துக்கு நன்றி.

      எனக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தேவை இல்லை.

      ஒத்துழைப்பு ஒன்றே நான் எதிர்பார்ப்பதெல்லாம்.

      யார் யார் தயார்?

      Delete
  12. நமதூரில் அவ்வப்போது நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்க முக்கிய காரணம் நமது பெண்கள் திருமண வீட்டிற்க்கு செல்லும் போது விலை உயர்ந்த புடவைகளை உடுத்தியும், அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து செல்கிறார்கள். திருமண வீட்டு பெண்கள், திருமணதிற்கு வரும் பெண்கள், சிலர் தன்னுடைய அழகை எப்படியெல்லாம் வெளிபடுத்த வேண்டுமோ அப்படியெல்லாம் வெளிப்படுத்தி காட்டுகிறார்கள். திருமண வீட்டில் நமது பெண்கள் புர்காவை கழற்றி விடுவார்கள். திருமணம் வீட்டாரும், அவர்களது குடும்பத்தார்களும், கல்யாண கூப்பாடு என்று கூறி விலை உயர்ந்த பட்டுபுடவைகளும், நகைகளும் அணிந்து பத்து பேர் ஒரு ஆட்டோவில் ஏறி கொண்டு சத்தமாக பேசி கொண்டு செல்கிறார்கள். அந்த சத்தத்தை கேட்டு முகம் தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள், அனைவரும் நமது பெண்களை பார்க்க கூடிய நிலை உருவாகுது. முகம் தெரியாத நபர்கள் நமது பெண்கள் அணியும் ஆடைகள், நகைகள், நமது பெண்களையும் உற்று பார்க்ககூடிய நிலை வருகிறது. பின்னர் அந்த முகம் தெரியாத நபர் நமது பெண்கள் எங்கே செல்கிறார்கள், எந்த தெரு, எந்த ஊரு, குடும்பத்தில் எத்தனை பேர், தெருக்களில் மனிதர்களின் நடமாட்டம் எத்தனை மணிவரைக்கும், கொள்ளையடிக்க போகிற வீடு எத்தனை மணிக்கு விளக்கை அணைக்கிறார்கள் என்றெல்லாம் நோட்டமிட்டு கொள்ளை அடிக்கிறார்கள். நமதூரில் நமது பெண்கள் கூப்பாடு செல்வதை தடை செய்ய வேண்டும். திருமண வீட்டில் நமது பெண்களை அந்நிய ஆண் பார்க்காதவாறு திருமண விட்டார்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இந்த கருத்துக்கு நன்றி.

      நம் பெண்கள் குற்றவாளிகள் இல்லை. அப்பெண்களின் கணவன்மார்களே குற்றவாளிகள்.

      இன்றைய சூழலில் நிறைய பெண்கள் கெட்டுப்போக காரணமாக இருப்பவர்கள் கணவன்மார்களே.

      அப்பேற்பட்ட கணவன்மார்களை எப்படி வேண்டும் என்றாலும் அடிக்கலாம்.

      Delete
  13. நீங்கள் சொல்லும் வரிகளை சமுதாய அமைப்புகள் அல்லது மக்கள் நலன் அக்கறை கொண்டோர் அனைத்து ஜும்மா மற்றும் கடைத்தெரு,பேருந்து நிலையம்,பள்ளி கல்லூரி,மக்கள் சந்திக்கும் இடங்களில் நோட்டீசாக அல்லது எதோ எதோதற்கோ கட் அவுட் வைக்கும் இளைஞர்கள் நீங்கள் சொன்ன வரிகளுக்கும் வைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

      இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நமதூரில் உள்ள எல்லாக் குறைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

      Delete
  14. இவற்றை நோட்டீஸ் அடித்து ஊரில் விநியோகிக்க வேண்டிய அவசியமான தகவல்கள்.

    Reply

    ReplyDelete
  15. எல்லாம் சரிதான் ,ஆனால் வெளி மாநில தொழிலாளர்கள் கொடுக்கும் கூலிக்கு ஒழுங்காக வேலை செய்கிரார்கள் . உள்ளூர்
    தொழிலாளர்கள் ஏமாற்றுவதே நோக்கமாக கொண்டுள்ளார்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்லவர்கள் நம்மிடமும் உண்டு, வெளியிலும் உண்டு - திருடர்கள் நம்மிடமும் உண்டு, வெளியிலும் உண்டு.

      நம்மிடம் உள்ளவர்கள் திருட சற்று பயப்படுகிறார்கள், சில நேரங்களில் திருடி விடுகிறார்கள்,. வெளியில் உள்ளவர்கள் சற்றும் தயங்காமல் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள்.

      இரண்டாம் நம்பர் பள்ளிக்கு எதிரே ஒரு ராஜஸ்தானி நகை வியாபாரம் செய்து வந்தான், பின்பு திருடிக் கொண்டு ஓடிவிட்டான்.

      அதே இரண்டாம் நம்பர் பள்ளிக்கு எதிரே ஒரு ராஜஸ்தானி எலக்ட்ரிக் சாமான்களை வைத்து வியாபாரம் செய்கின்றான், சற்று நேர்மையாக இருக்கின்றான்.

      என்னத்த சொல்ல.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.