.

Pages

Sunday, March 16, 2014

அதிரை அஹமது மொய்தீன் ஆம் ஆத்மிக்கு எழுதிய அவசர கடிதம் !

To: christinasamyaap@gmail.com, anandvganesh.md@gmail.com, lenin1.m@gmail.com, mailcholan@gmail.com, nagarajan24tn@gmail.com, rjshsrn@yahoo.com, roselinjeeva@gmail.com, snirmal@hotmail.com

அன்புள்ள ஆம் ஆத்மி தமிழக தலைமையகத்திற்கு,
நான் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவன். இங்கு TR. பாலு மற்றும் திரு.கு.பரசுராமன் ஆகியோர் போட்டியிடுகின்றார். இவர்களில் T.R. பாலு எங்கள் ஊரில் பல ஆண்டு காலமாக ஓடிக்கொண்டிருந்த எங்கவீட்டும் பிள்ளை "கம்பன் எக்ஸ்பிரஸ்" ரயிலை எங்கள் ஊரை விட்டே விரட்டியவர்.

மேலும் எங்கள் ஊர் நல்லவர்கள் சேர்ந்து மீண்டும் முயற்சி செய்தனர் அதற்க்கும் இவர் முட்டுக்கட்டையாக இருந்தவர்...இவர்கள் நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள் ஆகையால் இவர்கள் எங்களால் தோற்க்கடிக்கப் படவேண்டியவர்.

எங்கள் மாவட்டம் தஞ்சைக்கு செல்லப்பெயர்...."நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை" எங்கள் தஞ்சை ஒருகலத்தில்...."ஞ்" ஆனால் இன்றோ இவர்களின் பொறுப்பற்ற நிலையாலும், கார்ப்பரேட்டர்களின், ரியல் எஸ்டேட் டர்களின் கைகூலியாக செயல்பட்டு " என் விவசாய மக்கள் உண்ன உண்வின்றி" ...உணவுக்கு பதில் "எலிக்கறி" உண்ட நிலை கண்டதுண்டா ?
 ஒரு நேரத்தில் ஒட்டு மொத்த உலகத்திற்க்கும் உண்ண உணவும் (அரிசியை), குடிக்க தண்ணீரும் தந்தவன் என் "தஞ்சை மண்ணுக்கே சொந்தக்காரன் ... என் உயிர் உழவன்... இன்றே அவன் நிழை கல்லுடைப்பதும், ரோடு போடுவதுமே ! மீதி நேரம் பட்டினியே !

இன்றோ தஞ்சையின் நிலை பெரிய பெரிய...பேக்டரிகளும், கட்டிடங்களும் காரணம் இவர்கள் வாங்கிய லஞ்சமே ....ஆகையால் இவர்கள் இருவரும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் !

ஆகையால்....இவர்களை தோற்க்கடிக்க ஒரு வலிமைமிக்க வேட்பாளர் தேவை என் "ஞ்" தஞ்சைக்கு...ஆதலால் தயவு செய்து என் கடிதம் பரிசீலிக்கப்பட வேண்டும்...

சில நாட்களுக்கு முன் "திருமதி.கிருஷ்ட்டினா அவர்களை தொடர்பு கொண்டேன் அவர்கள் பிசியாக இருப்பதாகச் சொன்னார்கள்.  ஆகையால் மறுபடியும் ஒரு நேர்க்கானல் தஞ்சைக்கு தேவை ... ஒரு நல்ல வேட்பாளரை ...படித்த பட்டதாரிகள் சமூகத்தில் அக்கரை உள்ளவர் ,,..சாதி வெறி, மத வெறி இல்லாதவர் இச்சமூகத்தை அரவனைப்பவர்....நல்லவரை தேர்ந்தெடுங்கள்.

"ஆம் ஆத்மி" அங்கு ஒரு நிலையான கால் பதிக்கவேண்டும் ஒட்டு மொத்த இந்தியனும் தலை நிமிர்ந்து நிற்க்க வேண்டும். என்னால் முடிந்த  உதவிகளையும் இத்தேர்தலுக்குச் செய்வோம்...இன்ஷா அல்லாஹ்.

"ஆம் ஆத்மி மிளிரட்டும் இந்தியா ஒளிறட்டும்"

என்றும் அன்புடன்,
அ.அஹமது மொய்தீன்
துபை
date: 13-mar.2014

13 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தம்பி உங்களின் ஆதங்கம் புரிகிறது.
    ஒற்றுமையுடன் புரிந்துகொள்வதற்கு யார் யார் தயார்?

    மாற்றம் ஏற்படாதவரைக்கும் நமது ஏக்கம் நிறைவேறப் போவதில்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. Neegka tmmk elo appade aathmekku ponejho...
    agka kuttane mamaka....iuml...kaikatdum napar win nugko

    ReplyDelete
  3. T . R பாலு கண்டிப்பாக தோற்க்கடிக்கபடுவார்- இவர் சார்ந்த கட்சி ஊழலில் மட்டுமல்ல தமிழர்களின் சாபக்கேடு பெற்றவர்கள். அடிக்கடி தொகுதி மாற்றி வெற்றி கண்டவருக்கு இந்த தேர்தல் ஒரு பிரேக் கிடைக்கும். புதியவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் நம் சமுதாய மக்கள்.

    ReplyDelete
  4. திமுகவுக்கு வாக்களித்தோம் நமதுருக்கு ரயில் வரவில்லை. காங்கிரஸ்க்கு வாக்களித்தோம் அதிராம்பட்டினம் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்தோம் உண்ணக்கூடிய உணவு, அருந்த கூடிய தண்ணீர், மக்கள் உபயோகிக்க கூடிய பொருட்கள் அனைத்திலும் விலைவாசியே உயர்த்திவிட்டார்கள் கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். அதிராம்பட்டினம் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்து வெற்றிபெறு பட்சத்தில் மேலே கூறப்பட்ட அரசியல் கட்சிகள் செய்த தவறை போன்று ஆம் ஆத்மி கட்சியும் செய்து விடும் பட்சத்தில் நாம் என்ன செய்வது. சிந்தியுங்கள்! ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் அதிராம்பட்டினம் மக்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் ஊருக்கு அடிப்படை தேவையே நிறைவேற்றி தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எத்தனையோ தடவை மனுக்களை கொடுத்தும், MLA, MP, போன்றவர்களையும் சந்தித்து நேரடியாக கூறியும், மனுக்களை கொடுத்ததும், எந்த ஒரு நடைவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நாம் என்ன செய்து இருக்க வேண்டும். அடுத்த கட்டமாக நமதூர் மக்களும், நமதூர் இயக்கங்களும் சேர்த்து ஊரின் முக்கிய பகுதியான நமதூர் பேருந்து நிலையத்தில் தர்ணா போராட்டம் செய்து இருக்க வேண்டும். போராட்டம் செய்தால் தான் நமதூர் தேவைகள் நிறைவேறும் என்று இருந்தால், நமதூர் முன்னேற்றதிற்கு நாம் போராட்டம் பண்ணுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.
    எந்த கட்சி வந்தாலும் ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் அதிராம்பட்டினம் மக்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. எந்த ஒரு நடைவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நாம் என்ன செய்து இருக்க வேண்டும், Pls think?

    ReplyDelete
  6. Amatmi first stand Delhi don't bring to adirai.
    First stand together. Fight local team

    ReplyDelete
  7. Amatmi first stand Delhi don't bring to adirai.
    First stand together. Fight local team

    ReplyDelete
    Replies
    1. தமீம் காக்கா, டில்லியா இருக்கட்டும் , அதிரையா இருக்கட்டும்....ஆம் ஆத்மியில் என்ன ஒரு தவறு உள்ளது...மேலும் எந்த அரசியல் கட்சிகள் நமக்கு நண்மையையும் நம் மார்கத்தில் உள்ளது போல் ஓரளவுக்கு நல்லது செய்ய விருப்புகிறார்கள்..அதுவே என்னை கவர்ந்தது.

      Delete
  8. டி ஆர் பாலு தோற்கடிக்கபடவேண்டும்

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்குகும்.
    தம்பி அஹமது மொஹியத்தீன் அவர்களே,
    சகோதரர் உமர் தம்பியின் உள்ள குறை என்ன?
    அவர் போட்டியிட்டால் என்ன?
    அவர் போட்டியிடுவதை நீங்கள் ஏன் விரும்பவில்லை?
    இதை தெரிவிக்காமல், வேறு ஒருவரை போட்டால் நல்லது என்று சொல்கிறீர்கள்.
    நமது ஊர்காரர் யாரைப்போடலாம் என்று நீங்களே தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    அதை விட்டுவிட்டு இவர் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். காரணம் தெரிவிக்கவில்லை.
    ஒரு பள்ளத்தில் விழுந்த நண்டு, தானும் வெளியேறாமல் வெளியேற முயன்ற மற்ற நண்டுகளையும் வெளியேற விடாமல் இழுத்துப்போட்ட "நண்டு கதை" தான் ஞாபகம் வருகிறது.
    யாராக இருந்தாலும் ஊர் ஒற்றுமைக்கு முயற்சிக்கனும் தம்பி. (எனக்கு வயது 60க்கு மேல்).

    வாழ்க ! வளர்க !! அல்லாஹுத்த'ஆலா உங்களுக்கு நீண்ட ஆயுளையும் தந்து, பரகத்தும் ரஹ்மத்தும் செய்வானாக !!!

    ReplyDelete
    Replies
    1. நான் யாரையும் குறை சொல்ல விருப்ப வில்லை.....நான் அங்கு குறிப்பிட்டுல்லது... ஒரு திரமை உள்ள, படித்த பட்டதாரி...எல்லா தரப்பு மக்களையும் தன் சமூக தொண்டாலும், அன்பாலும் அறவனைத்தவர்கள் நமது ஊரிலும், நமது மாவட்டத்திலும் அதிகம் போர் உள்ளனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது நல்லது..என்பது என்னுடை விவாதமாகவே இருக்கும். ஊரில் ஒரு சில மக்களோடு வெருப்பை உண்டாக்கியும், எந்த ஒரு கட்சியிலோ, இயக்கத்திலோ தனக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்ற சுய நலம் இருக்க கூடாது. அப்படி முன்னுரிமை அளிக்காதவர்களை விட்டு வேறு ஒரு கட்சிக்கு அடிக்கடி மறிக்கொள்வது.... இதல்லாம் ஒரு கேள்விகளே !

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.