தஞ்சை பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கணிசமான அளவில் சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வேட்பாளர்களின் வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்ககூடிய மாபெரும் சக்திகளாக திகழ்வதால் கட்சிகள் பல சிறுபான்மை இனமக்கள் கணிசமாக வாழக்கூடிய பகுதியாக கருதப்படுகிற அதிரையை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். கடந்த [ 12-03-2014 ] அன்று அதிமுக கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரு கு. பரசுராமன் வருகை தந்து சமுதாய அமைப்பினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி தஞ்சை தொகுதியின் வேட்பாளராக திரு T.R. பாலு அவர்களை களமிறக்கி உள்ளது. திமுக நகர நிர்வாகிகள், அதிரை பேரூராட்சி தலைவர், கூட்டணி கட்சியினர், மஹல்லா நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோருவதற்காக இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த தஞ்சை தொகுதியின் வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்...
கேள்விகள் :
தஞ்சை தொகுதியில் முதல் முறையாக திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறீர்கள், இந்த தொகுதி மக்களுக்காக என்னென்ன வாக்குறுதிகளை தந்து பிராச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் தொடர்ந்து தாமதமாக காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே நிலைக்குழுவில் பொறுப்பில் இருக்கும் உங்களின் பதில் என்ன ?
வேட்பாளரின் பதில் இதோ...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அதிராம்பட்டினம்-614701.
முந்தைய திமுக மக்களவை உறுப்பினர் பழனிமாணிக்கத்தை தான் நீங்க ஓவர்டேக் செஞ்சது ஊருக்கே தெரியுமே, அப்புறம் அவர் அகல இரயில்பாதை வருவதற்கு ஒன்னும் செய்யலன்னு திரும்ப வேற சொல்லனுமா? அவர் என்ன அதிமுகவிலிருந்தா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்?
ReplyDeleteஅஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை ஆட்சி மாறியதாக கூறுகிறீர்களே, கடந்த ஒன்பதாண்டுகளாக உங்கள் கட்சி தானே ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தது. இதே ஐந்தாண்டுகளில் தானே மன்னார்குடிக்கு புதிதாக இரயில் விட முடிந்த உங்களால், ஐம்பதாண்டுகளாக இருந்த இரயில் பாதையை துரிதப்படுத்தாமல் தள்ளிப்போடும் வேலைகளில் ஈடுபட்டது தான் இப்பகுதியில் வசிக்கும் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியுமே...
தம்பி ஒருத்தர் எம்எல்ஏவிற்கு வாழ்த்துக்கள்னாரு, இப்ப அண்ணன் எம்பிக்கு வாழ்த்துக்கள்னு சொல்றாரு, சரி நாகரிகம்தான்.
ReplyDeleteஆனா என்ன, இவங்க வீட்டுப் பக்கம் ஸ்பெசலா ரோடு ஏதும் இவங்க தனியா போட்டு கொடுத்துருக்காங்களா? #சும்மா #அதிகபிரசிங்கி
உறுதியாக, உண்மையாக, செயல்படப்போகும் வேட்பாளர் யார்? அது தான் இங்கு பிரச்சனை. நான் அதை செய்வேன், இதை செய்வேன், உங்கள் ஊருக்கு புகைவண்டி கொண்டு வர முயற்சிப்பேன், உங்கள் ஊரு முன்னேற்றதிற்கு பாடுபடுவேன். என்று அணைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் நேரத்தில் கூறுவது சகஜம் தான்.
ReplyDeleteஇந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் யார்? அதிலே தான் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அதிராம்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படும் வேட்பாளர்கே வாக்களியுங்கள்.
மக்களே! சிந்தித்து வாக்களிப்பீர்!
சிஎம்பி தெருவுக்கு பாதாள சாக்கடை, இளைஞர்கள் விளையாட கிரவுண்டு என்று அள்ளி விட்டாரே ஒருத்தர் அதான் எம்எல்ஏ. அவரோடு அன்னைக்கு நம்ம திமுக சேர்மன் அஸ்லம் காக்கவும் தானே ஜீப்ல நின்னு வாக்கு கொடுத்தாங்க, அதெல்லாம் என்னாச்சு?
ReplyDeleteMaaker entha kanoleyai mulumaiyaka parththu purenthu kollavum.
ReplyDeletenaakarekam avaseyam sar
we need change before that we have to change...........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//தம்பி ஒருத்தர் எம்எல்ஏவிற்கு வாழ்த்துக்கள்னாரு// அப்போதைய அதிரை எக்ஸ்பிரஸ் அட்மின்க்கு ... அப்பொழுது நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் தேமுதிகவின் செந்திலுக்கு வாழ் பிடித்தபொழுது உண்மையில் வெற்றிபெறபோகும் ரங்க ராஜனுக்கு வாழ்த்து சொன்னதில் தப்பிலையே மாற்றாக ஆதரித்த நீங்கள் சாரி உங்க கட்சியல்லாவா தோல்வியை தழுவியது !
ReplyDeleteதொடர்ந்து 5 முறை வெற்றி கண்ட நாயகனுக்கு இந்த தேர்தலில் முடிவுரை எழுதப்படும், ஊழல் என்றால் என்னவென்று தெரியாத கட்சி. சமீபத்தில் தான் ஊரில் நாய்களை பிடித்தார்கள் இல்லை என்றால் அதுவும் தன் வேலைய கண்பித்து இருக்கும்!
ReplyDelete