.

Pages

Monday, March 10, 2014

அதிரையில் முஸ்லீக் லீக் கட்சியினர் 3 இடங்களில் கொடியேற்றம் !

இன்று முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது. இன்று காலை 10 மணியளவில் அதிரையில் மூன்று இடங்களில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தக்வா பள்ளியின் முக்கத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் கட்சியின் நகர தலைவர் K.K. ஹாஜா அவர்கள் தலைமை வகிக்க, ஹாஜி முஹம்மது சாலிகு கொடியேற்றி வைத்தார்.

சேர்மன் வாடி முக்கத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப் தலைமை வகிக்க, மாநில துணைத்தலைவர் S.S.B. நசுருதீன் கொடியேற்றி வைத்தார்.

ஈசிஆர் கல்லூரி சாலையின் முக்கத்தில் [ டேட் கடை அருகே ] கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் SMA அக்பர் ஹாஜியார் தலைமை வகிக்க, அதிரை கவிஞர் முஹம்மது தாஹா அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளர் NMS. ஜெஹபர் அலி, நகர பொருளாளர் KSA. அப்துல் ரஹ்மான், A. சேக் அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, நெசவுத்தெரு ஜமாத் தலைவர் முகம்மது மைதீன், சம்சுதீன், இத்ரீஸ், அன்வர், முகம்மது புஹாரி, தக்வா பள்ளி டிரஸ்ட் பொருளாளர் ஜெமீல், இமாம் முஹம்மது தமீம், ஹாஜா செரிப் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நாரே தக்பீர் ! அல்லாஹ் அக்பர் !!  என்ற கோஷமும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் நமக்கே' என்ற சூளுரையும் எழுப்பட்டன.



5 comments:

  1. //நாரே தக்பீர் ! அல்லாஹ் அக்பர் !! என்ற கோஷமும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் நமக்கே' என்ற சூளுரையும் எழுப்பட்டன.//முஸ்லிம் லீக் 40 தொகுதிகளிலும் போட்டி இடுகிறதா? சொல்லவே இல்லை?

    ReplyDelete
    Replies
    1. தோழமை என்றால் நாங்கள் வாகுறுதிப்பிரகாரம் அனைத்துத் தொகுதியிலும் வேலூரைப்போலவே வெற்றிப்பெற வேண்டும் என்ற உறுதியில் சொல்கிறோம். அவ்வாறு சொல்லாமல் வேறு எப்படி ஒரு இஸ்லாமியன் கூறமுடியும் ?

      Delete
  2. Iya medeyavel Ulla neegkalea eppade antal pamatan appade?
    40 namathea anral kutdane searththu thagkappa naagka 40thel potde poda masael peasum markka katchcheya?

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.