.

Pages

Monday, March 24, 2014

காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார், எம்.எல்.ஏ ரெங்கராஜன் ஆகியரோடு அதிரை நியூஸின் நேர்காணல் [ காணொளி ]

தேர்தல்களம் 2014 : 
தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பிரச்சார பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகின்றன. இதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டி அதிரைக்கு வருகை தந்து முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றனர். கடந்த [ 12-03-2014 ] அன்று அதிமுக கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரு கு. பரசுராமன் வருகை தந்து சமுதாய அமைப்பினரை சந்தித்து ஆதரவு கோரினார். அதை தொடர்ந்து கடந்த [ 14-03-2014 ] அன்று திமுக தஞ்சை தொகுதியின் வேட்பாளர் திரு T.R. பாலு வருகை தந்து திமுகவினர், கூட்டணி கட்சியினர், மஹல்லா நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக நிறுத்துப்பட்டுள்ள திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA  ஆகிய இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் அதிரை MMS குடும்பத்தினர், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோரை சந்திப்பதற்காக அதிரைக்கு வருகை தந்த இருவரிடமும் 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்...

கேள்விகள் :
தஞ்சை தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறீர்கள், இந்த தொகுதி மக்களுக்காக என்னென்ன வாக்குறுதிகளை தந்து பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?

அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் முழுதும் விரைவாக நடைபெற உங்களின் முயற்சி எவ்வாறு இருக்கும் ?

வேட்பாளர் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகியோர் கூட்டாக நமக்கு அளித்த பதில் இதோ...

3 comments:

  1. இந்த MLA சட்ட சபையில் என்ன பேசினார் என்பதை அடுத்த தடவை கேட்க மறக்க வேண்டாம். இவர் போனாரா இல்லையா என்பது சந்தேகம், திறமையானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மஸ்தான் கனி அவர்களே...எம்.எல்.ஏ வின் முகபுத்தக லிங்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

      https://www.facebook.com/profile.php?id=100003068684682&fref=ts

      Delete
  2. பதிவுக்கு நன்றி.
    நல்லதொரு முயற்சி,.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.