.

Pages

Thursday, March 13, 2014

குச்சியில் வீடு கட்டிய அதிரை இளைஞர் ! [ புகைப்படங்கள் ]

அதிரை மேலத்தெருவைச் சேர்ந்தவர் நியாத்கான்.  இவர் குச்சியால் வீடு கட்ட முடியும் என்பதை நிருபித்துள்ளார். கபாப் சாப்பிடும் குச்சியைக் கொண்டு ஒரு அழகிய வீட்டையும், ஐஸ்கிரீம் மர ஸ்பூனைக் கொண்டு மற்றுமொரு அழகிய வீட்டையும் உருவாக்கியுள்ளார். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் இவரின் படைப்புகள் பலரின் பாராட்டை பெற்று வருவது மேலும் பல படைப்புகளை உருவாக்க இவருக்கு தூண்டுகோளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பழங்கால இந்திய நாணயங்கள் ரூபாய் நோட்டுக்கள் உள்பட  பல்வேறு நாட்டின் நாணயங்களையும்,ரூபாய் நோட்டுக்களையும் ஆர்வத்துடன் சேகரித்து வருகின்றார்.








   

6 comments:

  1. அரசியல்- அவதூறுகள்- பழிப்புகள்- வசவுகள்- நீயா நானா வுக்கு மத்தியில் இந்தப் பதிவு ஒரு ஆறுதலாக இருக்கிறது.

    தம்பிக்கு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் ஒளிந்து கிடக்கும்.அதை வெட்கப்படாமல் வெளிக்கொண்டு வரவேண்டும்.அப்போதுதான் மென்மேலும் பல சாதனைகள் படைக்கலாம்.

    ReplyDelete
  3. அருமை, அருமை - மேலும் சமுதாய சிந்தனைகள் தூண்டும்விதமாக படைப்புகள் உருவாக்க என் பாராட்டுகள்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.