.

Pages

Wednesday, March 19, 2014

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவன் விபத்தில் பலி !

பட்டுக்கோட்டை வளவன் புறத்தை சேர்ந்தவர் மோகன் இவருடைய மகன் விஜய் [ வயது 18 ] இவர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை விலங்கியல் பிரிவில் கல்வி பயின்று வருகிறார். அதே ஊரைச்சேர்ந்தவர் வீரமணி [ வயது 20 ] நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் கரம்பயம் அருகே ஏற்பட்ட விபத்தில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வாகனத்தை ஓட்டிச்சென்ற வீரமணி பலத்த காயங்களுடன் தஞ்சை மெடிக்கல் கல்லூரியின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்த விஜயின் உடலை பிரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை பிரத பரிசோதனை முடிந்தவுடன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து பாப்பாநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.