.

Pages

Saturday, August 23, 2014

தண்ணீர் திறந்துவிடக்கோரி மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அலுவலருடன் சந்திப்பு !

தண்ணீர் இல்லா வறண்டு காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விடக்கோரி நேற்று முன்தினம் அதிரை பேரூராட்சி தலைவர் - சம்சுல் இஸ்லாம் சங்கம் - தாஜுல் இஸ்லாம் சங்கம்   சார்பில் நிர்வாகிகள் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

மனுக்களை அளிப்பதற்காக அதிரையிலிருந்து நிர்வாகிகள் நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு வாகனங்களில் தஞ்சை புறப்பட்டு சென்றனர். இதில் அதிரை பேரூராட்சி தலைவர் SH அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சாலிஹு, மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் PMK தாஜுதீன், செயலாளர் ஜபருல்லாஹ், ராஜிக், அதிரை TIYA தலைவர் ஜமாலுதீன், மன்சூர், சமூக ஆர்வலர்கள் அமீன், வீரையன், திமுக 19 வது வார்டு செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை அலுவலர் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக நிர்வாகிகளிடம் உறுதியளித்தாக கூறப்படுகிறது.

தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரை நகர மக்கள் அனைவரும் குடிநீரை காட்டுக் குளப்பகுதியில் ‎இருந்துதான் அன்று முதல் பெற்று வருகின்றனர். இது அகில ‎உலகத்துக்கே தெரியும், காட்டுக் குளத்தை காயப்போடாமல் ‎பார்த்துகொள்வது பேரூர் நிர்வாகத்தின் கடமை.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.