.

Pages

Monday, March 16, 2015

துபாயில் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்ற அமெரிக்க ஆசிரியை !

உலகின் சிறந்த ஆசிரியராக அமெரிக்காவை சேர்ந்த நான்ஸி அட்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை தான் உருவாக்கிய பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

ஆசிரியர் பணியை சிறப்பிக்கும் வகையிலும், அதன் மதிப்பை உயர்த்தும் நோக்கத்துடனும் ‘உலக ஆசிரியர் விருது’ உருவாக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி முதன் முதலாக  அமெரிக்காவை சேர்ந்த ஆங்கில ஆசிரியை நான்ஸி அட்வேல் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா துபாயில் நேற்று நடந்தது.

இந்த விருதை பெற்ற பிறகு பேசிய நான்ஸி அட்வேல் "இந்த விருதை பெறுவதற்காக பெருமைப்படுகிறேன். இந்த பரிசுத்தொகை முழுவதையும் நான் உருவாக்கி நடத்திவரும் பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்த விருது மூலம் பல திறமையானவர்கள் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

1 comment:

  1. ஆசிரியர்களை கவ்ரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டு, அதனை கல்விக்காக செலவிடுவது நல்ல எண்ணம். தரமான கல்விக்காக பரிசுகளை அள்ளிக் கொடுக்கிறார்கள், இந்தியாவில் கணவன் மனைவி அரசு வேலையில் வெவ்வேறு ஊரில் வேலைப் பார்க்க நேரிடுகிறது, ஒரே ஊரில் வேலை பார்க்க விண்ணப்பித்தால் MRP ரேட் நிர்ணயித்து அமைச்சர்கள் பணத்தை உரிமையுடன் கேட்கிறார்கள், அரசு ஓட்டுனர் பதவிக்கு 3 லட்சம் கொடுத்தால் சீட்டு இல்லேயேல் வேட்டு. லஞ்சம் ஒழியுமா??

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.