ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்றாக இருந்தது. அதிரையில் பத்திர பதிவு அலுவலகம் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள கட்டிடத்தில்தான் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அரசின் சார்பில் மாதந்தோறும் வாடகை தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
அரசின் அறிவிப்பை அடுத்து பத்திர பதிவு அலுவலகம் அமைப்பதற்காக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடம் தேர்வு நடைபெற்று வந்தது. இறுதியில் நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்கள் தமக்கு சொந்தமாக உள்ள [ ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் ] 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். தானமாக வழங்கிய இடத்தை அரசின் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்தார். இதையடுத்து அரசு சார்பில் கட்டுமானப் பணிக்காக ₹ 1.05 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ₹ 55 லட்சம் மதிப்பிட்டில் கட்டிடம் கட்டுவதற்குரிய ஆரம்ப கட்ட பணி கடந்த [ 12-02-2014 ] அன்று துவங்கியது.
இந்நிலையில் கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் திறப்பு விழா காணப்பட இருக்கிறது. மாநில அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் இதற்கான திறப்பு விழா நடைபெற இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
புதுப்பொலிவுடன் கம்பிரமாக காட்சியளிக்கும் அதிரை பத்திர பதிவு அலுவலகத்தின் புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசர்களுக்காக வழங்குகிறோம்...
அருமையான கட்டிடம். இங்கே வரும் சில நபர்கள் வெத்தலையை போட்டு மூலைக்கு மூலை அசுத்தம் படுத்தாமல் எச்சரிக்கை பலகை வைத்து பாதுகாக்கவும்.
ReplyDeleteபெரும்பாலும் அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களிலும் ஏன் 1858 ல் கட்டியகட்டிடங்களில் விழும் தருவாயில் இன்னமும் இயங்கி பொதுமக்களுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது. சகல வசதிகள் கூடிய பத்திர அலுவலகம் நம்மவூரில் அமைய காரணமாக இருந்தவர்களை பாராட்டுவதோடு தாராள மனத்தோடு நிலத்தை வழங்கிய வள்ளலை பொது மக்கள் பாராட்ட வேண்டும்.
ReplyDeleteபதிவுகட்டனத்தை DD அல்லது Online Payment முறையிருந்தாலும் கட்டாயமாக லஞ்சத்தை அதிகாரிகள் கேட்டு வாங்குவதேன்? புது இடம், அலுவலகம் ஆனால் அதே தவறு செய்யும் அதிகாரிகள்?, பெண்களுக்கு குடிக்க தண்ணீர், கழிப்பறை இல்லாத குறையிருந்தாலும் லஞ்சத்தை தவிர்க்க என்ன வழி? நடவடிக்கை தேவை.
ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்களுக்கு துஆவும், வாழ்த்துக்களும்.
எனது அருமை நண்பன் ஜஹபர் அலி மற்றும் ஆலடி தெரு பினா முன குடும்பத்தாரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது ..இந்த அலுவலகம் ஊரின் மத்திய பகுதியான யானையன் குளத்தில் வரவேண்டும் என்று நான் தமிழக அரசிடம் பரிந்துரைத்து இருந்தேன் .
ReplyDeleteஇருப்பினும் இறைவனின் நாட்டம் அதுவே நடந்தேறும் .