.

Pages

Monday, March 23, 2015

அதிரையர்களுக்கு நெருங்கிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு !

அதிரை மேலத்தெருவை சேர்ந்த மாஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள் லீ குவான் யூ அவர்களின் மிக மிக நெருங்கிய நண்பராக இளமைகாலத்தில் திகழ்ந்துள்ளார்கள்.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், 31 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தவருமான லீ குவான் யூ அவர்கள் (வயது 91) இன்று அதிகாலையில் மறைந்துவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

இவருடைய ஆட்சி காலத்தில் தான் நம்முடைய முன்னோர்களான அப்பாமார்களும் வாப்பாமார்களும் சிங்கப்பூரில் தொழில் செய்தும் உழைத்தும் பொருளாதாரத்தை திரட்டி நம்முடைய உயர்விற்கும் நம் நாட்டின் அந்நிய செலாவணி உயர்விற்கும் உதவினர். அந்த அடிப்படையில் லீ குவான் யூ அவர்களை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பலரும் அறிந்திராத செய்தி ஒன்று:
அதிரை மேலத்தெருவை சேர்ந்த மாஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள் லீ குவான் யூ அவர்களின் மிக மிக நெருங்கிய நண்பராக இளமைகாலத்தில் திகழ்ந்துள்ளார்கள். லீ குவான் யூ அவர்கள் அரசியல் பாதைக்கு திரும்புமாறு விடுத்த அழைப்பை மட்டும் ஏற்றிருந்தால் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்கள் லீயின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், அல்லாஹ் நாடவில்லை.

குறிப்பு: வார்டு எண்: 15, கீழத்தெருவின் முன்னாள் கவுன்சிலர் சகோதரர் அப்துல் லத்தீப் மற்றும் நடப்பு கவுன்சிலர் சகோதரி ஷாஜஹான் ஆகியோரின் தந்தையுமாவார் மாஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள்.

1 comment:

  1. லீ எல்லோராலும் போற்றப்படும் மாபெரும் தலைவர், சிங்கபூரை உலக தறதிதிற்கு உயர்த்திய உத்தமர், ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டு அதில் வெற்றி கண்டவர், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தரமான வாழ்க்கை அமைய காரணமாக இருந்தவர், இவரைப்போல் தலைவர் பிறப்பது அரிது,

    நம் நாட்டில் உள்ள மக்கள் எப்பொழுது சுத்தத்தை நாடுவர்களோ? எங்கு பார்த்தாலும் குப்பை, கழிவு நீர், ரோட்டில் சிறுநீர் கழித்தல். சிங்கப்பூரை பார்த்தாவது நாம் கண்டிப்பாக திருந்த வேண்டும். சுத்தம் என்ற விஷயத்தில் இந்தியர்கள் ஆகிய நாம் மிகவும் கவனம் செய்ய வேண்டும். முதலில் பிளாஸ்டிக் பையை ஒழிக்க வேண்டும்.

    காலத்தை வென்றவன் லீ ....
    காவியம் ஆனவன் லீ .......
    ....
    இந்தியர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.