.

Pages

Saturday, March 28, 2015

முத்துப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து கணவன் மனைவி குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட 5பேர் காயம் அடைந்தனர்.

சென்னையை சேர்ந்த வீரசேகரன் தனது மனைவி பானு. தனது குழந்தைகள் சஸ்வந்திகா, நிவேதா, அகல்யா ஆகியோர் குடும்பத்துடன் தங்களது காரில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு மனை போடும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்திருந்தனர், இந்தநிலையில் நேற்று காலை நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னை செல்வதற்காக அதே காரில் தம்பிக்கோட்டையிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆலங்காடு பாலம் கடந்து உப்பூர் அருகே சென்ற கார் திடீரென்று நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக காரில் சென்ற முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.