.

Pages

Monday, March 30, 2015

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு தீவிரமாக களத்தில் இறங்கிய அதிரை சேர்மன் !

சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிரையும் ஒன்று. ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இந்த ஊரைச் சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிழளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது.  மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. இதற்காக அவசர . மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தஞ்சை புறப்பட்டு சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதிரையிலிருந்து புறப்பட்ட வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
 
 
 

4 comments:

  1. மாஷா அல்லாஹ்... முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். அல்லாஹ் இதற்கு துணை நிற்பானாக, ஆமீன்.

    ReplyDelete
  2. ''முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும்'' என நிரூபித்த நம்வூர் சேர்மனின் அடுத்த முயற்சி எனலாம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுவோம். வெற்றி கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. - இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. இது பெரும் முயற்சி மட்டும் அல்ல, நியாயமான கோரிக்கையும் கூட. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நிறைவேற ஏக இறைவனிடம் துஆ செய்வோம்.

    ReplyDelete
  4. முயற்சியும் அதற்க்கான பொருளாதார
    பங்கும் சகோ. S.H.அஸ்லம் அவர்களுடையது என்பதனையும் பதியவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.