.

Pages

Thursday, March 26, 2015

அவிசோ காப்பகம் மூடப்படவில்லை: நிர்வாகிகளின் தன்னிலை விளக்கம் !

அதிரையில் கடந்த 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது அவிசோ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல காப்பகம். வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த காப்பகம் அதிரை அடுத்துள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் ₹ 55 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் கட்டிட பணி நிறைவுற்று விரைவில் திறப்பு விழா காணப்பட இருக்கிறது.

இந்நிலையில் அதிரை சேதுரோட்டில் இயங்கி வந்த அவிசோ காப்பகம் மூடப்பட்டதாக செய்தி வெளியாகியது. இது தொடர்பாக அவிசோ காப்பக நிர்வாகிகள் நம்மை தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்.

அதில் சேதுரோடு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஏரிபுறக்கரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கட்டிட பணிகள் நிறைவுபெற்றவுடன் காப்பகம் விரைவாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டிட பணிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவிசோ நிர்வாகிகள் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்கம்:

புதிதாக கட்டப்பட்டு வரும் அவிசோ காப்பகம்:
 
 
 
 
 
 
 

1 comment:

  1. கண்தானம் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கிறது. நவீன தொழில்நுட்ப மருத்துவம், பயிற்சி மூலம் காதுகேட்கவும், செய்கை மொழியால் பேசவும் முடியும்.ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்தால், சரிசெய்ய வாய்ப்பில்லை. மருத்துவ வளர்ச்சி அதிகரித்தாலும், போதுமான விழிப்புணர்வு இன்மையால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு குறையவில்லை.எய்ட்ஸ் தடுப்புக்கு கொடுக்கும் விழிப்புணர்வில், ஒரு சதவீதம் கூட, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பை தடுப்பதற்கு, கொடுக்கப்படுவதில்லை என்பதை நினைக்கும்போது, வருத்தம் தான் ஏற்படுகிறது.

    கொஞ்சம் மனவளாச்சி குன்றிய குழந்தைகளை நம்வூர் தனியார் பள்ளியில் admission இல்லை அவர்களின் பெற்றோர் படும் பாடு சொல்லிமாளாது. மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்பநிலை பயிற்சி அளித்து, அதற்குபின், நல்லநிலையில் உள்ள குழந்தைகளுடன் கல்வி பயிலும் அளவுக்கு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தயார்படுத்துவது அரசின் திட்டம் அறிவித்தது, அறிவிப்போடு சரி.

    ராமகிருஷ்ணா மடத்தில் தொழுநோயாளிகளை எவ்வளவு அன்பாக கவனிக்கிறார்கள் அதன் நிர்வாகத்தை பற்றி பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கும் பலர் இம்மாதிரியான குழந்தைகளை வைத்து வியாபாரம் பண்ணுவதை பரவலாக தமிழகத்தில் பார்க்க முடிகிறது.
    அவிசோவில் நிறைகள் குறைகள் இருக்கலாம் நல்ல மனதோடு குழந்தைகளை கவனித்தால் இறைவன் நற்கூலி தருவான். ரிஜ்க் கொடுப்பதும் - எடுப்பதும் அவனே!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.