.

Pages

Sunday, March 29, 2015

சார்ஜாவில் மதுக்கூர் வாலிபருக்கு செவர்லெட் கார் பரிசு !

அதிரை அடுத்து உள்ள மதுக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (24). துபாய் நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இவர் பணியாற்றி வருகிறார்.

சார்ஜாவில் உள்ள அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவுக்கு சமீபத்தில் சென்ற இவர் 200 திர்ஹம்களை செலவழித்து குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கினார். 100 திர்ஹம்களுக்கு 2 சீட்டுகள் வீதம் 200 திர்ஹம் மதிப்பிலான கொள்முதலுக்கு அவருக்கு 4 சீட்டுகள் வழங்கப்பட்டன.

கடந்த பத்தாம் தேதி அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் தமிழரான ஷேக் அப்துல்லாவுக்கு பரிசாக செவர்லெட் மாலிபு-2015 ரக கார் கிடைத்தது. கடந்த 26-ம் தேதி (வியாழக்கிழமை) இந்த காரின் சாவி ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.