.

Pages

Saturday, March 28, 2015

அதிரை அருகே நிகழ்ந்த மோட்டார் பைக் விபத்தில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் !

மதுக்கூரை சேர்ந்தவர் அப்துல் ஸலாம் (வயது 65 ). இன்று காலை மதுக்கூரிலிருந்து அதிரையை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் பயணமானார். வாகனம் மலவேணிக்காடு பாலம் அருகே வந்த போது திடீரென மயங்கி விழுந்து பாலத்தின் கட்டாயத்தில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மதுக்கூர் மற்றும் அதிரை பேரூர் தமுமுக ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்றன. பலத்த காயமடைந்த அப்துல் ஸலாம் மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கோள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மதுக்கூர் - அதிரை சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

முன்னதாக தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலத்த காயமடைந்த அப்துல் சலாமை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
 

1 comment:

  1. விரைவில் பூரணகுணமடைய துவா செய்வோம். விபத்துக்கு தான் விடுமுறை இல்லேயே கவனமாக வரக்கூடாத.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.