.

Pages

Tuesday, March 24, 2015

விளையாட்டு வினையானது: 100 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் !

ரஷ்யாவில் சாகசம் செய்ய முயன்ற சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ரஷ்யாவை சேர்ந்த மாக்சிம் என்ற சிறுவன் டேர்டெவில் எனப்படும் வீர சாகசங்களை அடிக்கடி செய்து காட்டி தனது நண்பர்களிடம் பெருமை பட்டு வந்துள்ளான். சமீபத்தில் தலைநகர் மோஸ்கோவில் உள்ள ரயில் பாலத்தின் மீது ஏறுவதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு, 100 அடி உயரமுள்ள பாலத்தின் மீது ஏறியுள்ளான்.

இந்நிலையில் பாலத்தின் உச்சிக்கு சென்று கைகளை விட்டு சிறிது நேரம் அங்கேயே நின்ற சிறுவன், அந்த இடத்திலிருந்து பின்னோக்கி சில அடிகளை எடுத்து வைக்கும்போது மின்சார கம்பியை எதிர்பாரதவிதமாக தொட்டுள்ளான். அப்போது தூக்கி வீசப்பட்ட அந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளான்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலிசார், இறந்த சிறுவனின் நண்பர்களிடமிருந்து வீடியோவை கைப்பற்றி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலிஸ் அதிகாரி ஜனா வசிலியிவா கூறுகையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் செய்யும் சாகசங்களின் ஆபத்தை உணராமல் அநியாயமாக உயிரை விடுவது வேதனையாக உள்ளது. இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.