.

Pages

Monday, March 16, 2015

அதிரையில் நடைபெற்ற நுகர்வோர் தின சிறப்பு சட்ட ஆலோசனை முகாம்!

மார்ச் 15 உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு அதிரையில் ரிலீக்கான் அசோசியேட்ஸ் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.

அதிரை  ரிலீக்கான் அசோசியேட்ஸ் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் நுகர்வோருக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் வழிகாட்டலின்படி நடத்தப்பட்டது. இம்முகாமில் ரேஷன் மற்றும் இண்டேன் கேஸ் சம்பந்தமான பிரச்சனைகள், அனைத்து பொருட்களின் விலை, தரம், எடை தொடர்பான பிரச்சனைகள், சேவை நிறுவனங்களான சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவை குறைப்பாடு, தகவல் அறியும் உரிமை சட்ட பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதி மன்றத்தின் மூலம் நஷ்ட ஈடு பெறுதல், மேலும் நுகர்வோர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முறையான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து இம்முகாமின் ஒருங்கினைப்பாளர் Z. முகம்மது தம்பி B.A.B.L., அவர்கள் கூறுகையில்...
"நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-1986ன் படி நுகர்வோருக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தந்தை தனது குழந்தைக்காக கடையில் பணம் கொடுத்து பால் பவ்டர் வாங்கினாலும் அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்கி அதனை பயன்படுத்தும் பொழுது அது தரமற்றவை என தெரியும் பொருட்டு அதற்கான நஷ்ட ஈடு தொகையினை நாம் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் பெறலாம். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அறிவிப்பின் பதினோராவது ஷரத்தின்படி நுகர்வோர் புகார்கள் "வாய்தா"க்களினால் நுகர்வோர் நீதிமன்றங்களில் ஆண்டுகணக்கில் தேங்கிக் கிடைக்கின்றன. இதனை தவிர்த்து நுகர்வோர் நலனை பாதுக்காக்க எதிர்மனுதாரர் வாய்தா கேட்கும்போது, அதற்கான செலவு தொகையாக ரூபாய் 500ஐ குறைந்த பணத் தொகையாக நுகர்வோருக்கு கொடுக்கப்பட வேண்டும். இதனால் வாய்தா'கள் கேட்பது என்பது குறையும் அதுமட்டுமல்லாமல் நுகர்வோரின் நலனும் காக்கப்படுகிறது." என்றார்.

1 comment:

  1. எப்போதோ தயாரிக்கப் பட்ட பழைய பொருட்களை புதிய பேக்கில் அடைத்து Packed Date என்று சமீபத்திய தேதியையும் அச்சடித்து விற்கின்றனர். இதை நல்ல பெயருள்ள பிராண்டட் கம்பெனிகளும் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். அந்த பேக்கை பிரித்து உபயோகப்படுத்தும் நுகர்வோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். பேக்கைப் பிரித்து அது பழைய ஸ்டாக் என்றும் அது கெட்டுப் போயிருப்பதும் தெரியவந்தால்கூட கடைக்காரரிடம் (அதற்க்கான) அப்படியே திருப்பிக்கொடுக்கலாம் என்பதையும் நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டும். பலர் பொருட்களை வாங்கியவுடன் அதற்கான பில்லை தெருவில் போட்டுவிடுகின்றனர். சிலர் அங்கேயே பில்லை கிழித்து விடுகின்றனர். இப்படி செய்வதன்மூலம் காலாவதியான பொருட்கள் என்று கண்டறிந்தாலும் கடையில் திருப்பி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

    கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை கொடுத்து, பாக்கெட்டில் * போட்டு Terms and condition apply சொல்லி மக்களை ஏமாத்துறான் இதனை நீக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.