தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி அதிமுக கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பட்டுக்கோட்டை நகரம், பட்டுக்கோட்டை ஒன்றியம், மதுக்கூர் ஒன்றியம், அதிரை பேரூராட்சி, மதுக்கூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் அதிமுக கழக அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் ப.மோகன் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிரை பேரூர் அதிமுக செயலாளர் பதிவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இதில் அதிரை பேரூர் பகுதியின் அதிமுக செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் திரு. பிச்சை, அதிமுக பிரமுகர்கள் திரு. சேதுராமன், திரு. கு. பாஞ்சாலன் ஆகியோர் போட்டியிடப்போவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக கட்சியை பொறுத்தவரை எவ்வித சலசலப்பிற்க்கும் இடமளிக்காமல் சுமூகமாக தேர்வு நடைபெற்று, இதன் முடிவை கட்சி தலைமை முறையாக அறிவிக்கும் என பரவலாக பேசப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அதிரை பேரூர் அதிமுக செயலாளர் யார் என்பது தெரிந்துவிடும்.
எனது கருத்து
ReplyDeleteபிச்சைஐ தேர்ந்தடுக்கலாம்