.

Pages

Wednesday, March 18, 2015

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப தின நிகழ்ச்சி !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 15-03-2015  அன்று, காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை, “சமய நல்லிணக்க குடும்ப தின நிகழ்ச்சி”   ஒன்றை, சிங்கப்பூர் (EAST COAST PARK) கிழக்கு கடற்கரைப் பூங்காவில் மிகச் சிறப்பாக நடத்தியது.

ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தி ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி, மணலில் வீடுகட்டும் போட்டி,  பெற்றோர்களுக்கான போட்டி போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. மதிய உணவும், தேநீர் விருந்தும், அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்குடும்பதின நிகழ்ச்சியில், சுமார் 200 பேர் கலந்து சிறப்பித்தனர்.

தகவல்:முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.