அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும். சமீபத்தில் அரசு இதனை சுற்றுலாத்தளமாக அறிவித்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையின் முழு பட்டுப்பாட்டில் உள்ள இந்த அலையாத்திக்காட்டை ரசிப்பதற்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் முத்துப்பேட்டையிலிருந்து லகூன் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகுகளில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் அன்னை கல்லூரியின் பி.எட் பிரிவு மாணவ, மாணவிகள் சுமார் 150 பேர் நேற்று முன்தினம் அலையாத்திக்காட்டுக்குள் சென்று கள ஆய்வு நடத்தினர். மேலும் காட்டின் வளர்ச்சி மற்றும் அதன் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாக்கக்கூடிய பல்வேறு விதமான தாவரங்கள் பற்றி குறிப்பெடுத்தனர். மேலும் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விதமான இடர்பாடுகளை குறித்து அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் காட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவு பொருட்களை சுத்தம் செய்து அகற்றி கரைக்கு எடுத்து சென்றனர். பின்னர் அதே பகுதியில் மாணவ மாணவிகளின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் முதல்வர் ஹுமாயூன் கபீர் தலைமை வகித்தார். மீனவர் சங்க தலைவர் மீரான் முகைதீன், கல்லூரி பேராசிரியர்கள் பாலு, கவிதா, அசரவி, ஜான்சன், முனவர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும், அலையாத்திக்காடு பாதுகாப்பு இயக்கத்தினுடைய தலைவரும,; தமிழக நீர் நிலைகள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகியுமான முகம்மது மாலிக் கலந்துக் கொண்டு பேசுகையில்:
12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய பரபரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 61 வகை தாவரங்களும், 6 வகை புல்களும், 10 வகை கடல் தாவரங்களும,; 73 வகை மீன்களும், 10 வகை ஊர்ந்து செல்லும் உயிரினங்களும், 160 வகையான பறவைகளும,; 13 வகையான பாலூட்டிகளும் இங்கு உள்ளன. மேலும் அறிவியல் பூர்வமான தாவரங்களும், இயற்கைகளும் காணப்படுகிறது. இங்கு உள்ள இத்தகைய அரிய வகை காடுகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க போதிய வனத்துறை அலுவலர்கள் இல்லாதது கவலை அளிக்கிறது. மேலும் அலையாத்திக்காடுகளை அழிக்கும் வகையில் அலையாத்திக்காடுகளுக்குள் ஊடுறுவி செல்லும் கருவேள மரங்களும் காட்டை அழித்து வருகிறது. இதனை மத்திய மாநில அரசு கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அலையாத்திக்காட்டை அழிக்கும் இரால் பண்ணைகளையும், கருவேள மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் ஒவ்வொருவரும் காட்டின் வளர்ச்சி குறித்து ஒரு விழிப்புணர்வை மக்களிடமும், அரசிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று பேசினார். மேலும் அலையாத்திக்காட்டின் வளர்ச்சியும், அதன் மகிமையும், அதன் பெருமையும், பயனையும் பற்றி சுமார் 1 மணி நேரம் மாணவர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன் பின்னர் மாணவ, மாணவிகளின் அனுபவத்தைப் பற்றி பேசும் வாய்ப்பில் மாணவிகள் சுலோக்சினா, ராசிகா, பரிமளம், மாணவர் பிரவின் குமார் ஆகியோர் பேசுகையில்:
முத்துப்பேட்டை பகுதியை சுனாமியிலிருந்து காப்பாற்றியதாக கேள்விப்பட்டதை தவிர இந்த காட்டை பற்றி முழுமையாக நான் கேள்வி பட்டதே இல்லை. இன்று எங்களது கல்லூரி இப்படி ஒரு அதிசயம் நிறைந்த அலையாத்திக்காட்டை கண்டு கள ஆய்வு நடத்த வாய்ப்பளித்ததைக்கண்டு பெருமை படுகிறோம். உலகத்திலேயே எங்கையும் காணமுடியாத ஒன்றை நமது பகுதியில் காணும் பொழுது ரொம்ப பெருமையாக உள்ளது. காட்டின் வளர்ச்சிக்கும் அதனின் பயனுக்கும் நாங்கள் இன்று முதல் போராட தயாராகி விட்டோம். அரசு இதன் மீது அக்கரைக்கொண்டு இந்த காட்டை அழிவிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது போன்று பல மாணவ, மாணவிகளும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதில் முக்கிய பிரமுகர்கள், மீனவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், நிர்வாகிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.