இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி போட்டியில் அதிரை WSC அணியினரும், சாயல்குடி ஒப்பிலம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் அதிரை WSC அணியினர் முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றனர்.
இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமுமுக மாநில தலைவர் ஜேஎஸ் ரிஃபாயி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை பெற்ற அதிரை WSC அணியினரை பலரும் பாராட்டினர். இதே அணியினர் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Congrats
ReplyDeleteCongratulations my dears. ....
ReplyDeleteMasha Allah
ReplyDeleteCongrats Guys ...