.

Pages

Tuesday, March 17, 2015

வானத்திலிருந்து கடலில் நீரை உறிஞ்சும் அரிய காட்சி ! [ படங்கள் இணைப்பு ]

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும். இதன் நடுவே லகூன் என்னும் தீவுகள் உள்ளது. இதனால் அரசு சுற்றுலாதளமாக அறிவித்துள்ளது. அதனால் எந்த நேரமும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து லகூனில் அதிகளிவில் காணப்பட்டது. இதனையடுத்து வனத்துறை அதிகாரி அயூப்கான் தலைமையில் வனக்காவலர்கள் தீவிரப்பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர். நேற்று காலை 10 மணியளவில் லகூன் பகுதியிலும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் உள்ள வானத்தின் மேல்பகுதியில் திடீரென்று மேகம் மூட்டம் கருகத்தொடங்கியது. சில நிமிடங்களில் வான்மேல் அடுக்கிலிருந்து கீழ்நோக்கி சுழன்று வந்த கருநிற தாக்கம் இரண்டாக பிரிந்து கடலுக்குள் சென்று கடல் நீரை மேல்நோக்கி எடுத்து சென்ற ஒரு அற்புத சம்பவம் நடந்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகளும், வன அதிகாரிகளும் ஆச்சிரியம் அடைந்தனர். ஒரு சிலர் இந்த அரிய காட்சியை செல்போனில் படமும் பிடித்தனர். அடுத்த நிமிடங்களில் அப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியதால் இயற்கை அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் அனைவரும் படகில் கரைக்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து முத்துப்பேட்டை வன அதிகாரி அயூப்கான் கூறுகையில்: 
நான் சம்பவ இடத்தில் இருந்தேன். சுமார் 10 மணியளவில் பணி நிமிர்த்தமாக லகூன் பகுதியில் இருந்தேன். வான்மேல் அடுக்கிலிருந்து கீழ்நோக்கி லகூனில் தண்ணீரை மேல்நோக்கி எடுத்து செல்லும் போது நேரடியாக பார்த்து வியந்து போனேன். அந்த காட்சியை எனது செல்போனில் பதிவு செய்தேன். தண்ணீர் எடுத்து செல்லும் போது எங்கள் மேல் தண்ணீர் விழுந்தது. அதன் காரணமாகவே முத்துப்பேட்டையில் மழை பெய்தது என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.