.

Pages

Wednesday, March 25, 2015

டும்ம்ம்...டோஈங்ங்ங்...அதிர்ச்சியில் அப்படியே அமுங்கிப்போன அதிரையில் ஒரு பகுதியினர். {Very Worst Shock Report}

அட.! என்ன?
தலையை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற கதைதான் நம்மாளுகளின் கதை. வாலைப் பிடித்தாலும் பரவா இல்லையே தலையை எட்டி பிடித்து விடலாமே, அதையும் விட்டுட்டு இப்போ அம்போ என்று அமுங்கிபோனா எப்படி?

அட.!! நடந்தது என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலையில் மணி ஆறு இருக்கும், சற்றே விடிந்த வேளையில் பள்ளிக்கு ஓதுவதற்காக பதின்நான்கு வயது மதிக்கத்தக்க பெண் சிறார்கள் பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள், அந்த நேரம் பார்த்து “கட்டம் போட்ட சட்டையும், பேண்டும் அணிந்திருந்த ஒருவன் ஏடாகூடமாக பேசி இருக்கின்றான், பிள்ளைகளும் பயந்து போய் சத்தம் போட்டு வீட்டுக்குள் வந்து விட்டார்கள்.

அட.!!! அப்புறம் நடந்தது என்ன?
விபரம் அறிந்தவர்கள் சென்று போய் பார்க்க அவன் அங்கு இல்லை, பிறகு வீட்டில் உள்ளவர்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டுட்டு, முடியும்வரை அங்கேயே இருந்து பின்பு பிள்ளைகளை கையோடு கூட்டி வந்தனர்.

அப்பகுதியில் வயது முதிர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், நேற்றுமுழுக்க கண்ணாடி கிளாஸ் விற்பதற்காக பல பேர் சுற்றிக் கொண்டு இருந்ததாக கூறினார்கள். மேலும் அவர்கள் வெளி மாநிலத்தவர்கள் என்றும் சொன்னார்கள். மேலும் சொல்லுகையில் இரவு நேரங்களில் பால் காரன் வருகின்ற வேளைகளில் இனம்தெரியாத சில பேர்கள் சுற்றுவதாகவும் சொன்னார்கள்.

ஆக மொத்தத்தில் நூற்றுக்கு/தொன்னூற்று-ஒன்பது சதவிகிதத்தினர் வீதிவழியே விற்பனைக்காக வருபவர்களைத்தான் சந்தேகித்து குறை கூறுகின்றனர்.

இது நடந்தது சி.எம்.பி.லைன் வடக்கு பகுதியில், இந்த பகுதியில் நேரான சாலை வசதி கிடையாது, குறுகலான சாலை, ஓடி ஒழிய வசதியான இடம்கள் அநேகம் உண்டு. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வருகின்ற விளைவுகளை எப்படி ?

ஊரில் விற்காத சாமான்கள் எல்லாம் சி.எம்.பி.லைனில் விற்று விடும், இதை பயன்படுத்திக் கொண்டு பல வகையான வியாபாரிகள் சி.எம்.பி.லைனை முற்றுகை இடுவதை அன்றாடம் பார்க்கலாம்.

ஆற்று மணலை நன்றாக சலித்து எடுத்து சுத்தபடுத்தி, ஒரு ஒரு கிலோவாக அளந்து தனித்தனி பையில் போட்டு. இது துபாய் மண்ணு, இது சவூதி மண்ணு, இது லண்டன் மண்ணு, இது கனடா மண்ணு, இது அமெரிக்க மண்ணு, இது செவ்வாய் கிரகத்து மண்ணு. என்று கூவினால் கூட சில நொடிகளில் அத்தனை பைகளும் விற்றுப் போகும்.

அதுசரி என்னதான் முடிவு.
அந்தந்த பகுதி மக்கள் சரியான முறையில் விழிப்புணர்வோடு இருந்தால் இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம். விழிப்புணர்வோடு இருப்பதே ஒரு வகையில் தகுந்த நடவடிக்கைதான்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

3 comments:



  1. ஆற்று மணலை நன்றாக சலித்து எடுத்து சுத்தபடுத்தி, ஒரு ஒரு கிலோவாக அளந்து தனித்தனி பையில் போட்டு. இது துபாய் மண்ணு, இது சவூதி மண்ணு, இது லண்டன் மண்ணு, இது கனடா மண்ணு, இது அமெரிக்க மண்ணு, இது செவ்வாய் கிரகத்து மண்ணு. என்று கூவினால் கூட சில நொடிகளில் அத்தனை பைகளும் விற்றுப் போகும்.

    ReplyDelete
  2. மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம் ....முட்டிவிட்டு குனிவதை விட முட்டும் முன்பு குனிந்து செல்லலாமே ??? கருத்து வேறுபாடுகளினால் அமைப்புகளுக்குள் நடைபோட்டுகொள்ளும் நாம் இவைற்றை கவனிக்கலாமே ??

    ReplyDelete
  3. மண்ணாப் போனவனுக என்று நமது தாய்மார்கள் திட்டவில்லையா?

    கவனம். பல இடங்களில் திருட்டு அன்றாட நிகழ்வாகிவிட்டது. பெண்கள் தனியாக , வயதானவர்கள் தனிமையாக இருக்கும் இடங்களே இவர்களின் குறி.

    வசதி உள்ளவர்கள் சிசிடிவி கேமிரா வைக்க ஏற்பாடு செய்யலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.