ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் அட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அடையாள அட்டை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் 3.3.2015-ஆம் தேதி முதல் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை விடுபட்டோர் பட்டியலில் 7,86,089 பேர் உள்ளனர். இவற்றில் 43,132 நபர்களின் கைரேகைப் பதிவு மற்றும் உடற்கூறு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும், அவர்களுடைய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரோடு ஆதார் அடையாள அட்டை எண், தொலைபேசி, செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்ட அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திலும் நடைபெற்று வருகின்றன. 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் அடையாள அட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி, ஆதார் அடையாள அட்டை பதிவு மற்றும் உடற்கூறு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், துணை ஆட்சியர் ஜனனி செüந்தர்யா, தஞ்சாவூர் வட்டாட்சியர் சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் முருகவேல் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.